கொட்டாவி விட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
கொட்டாவி விட்டால் நாம் அதிகம் சோர்ந்துவிட்டோம் அல்லது செய்யும் விஷயத்தில் சலிப்புற்று விட்டோம் என்று பொருளா?
என்னைக்கூட ஆபீசில் குறிப்பிட்ட ஆளின் கட்டுரையை திருத்துகிறீர்களா என்று கிண்டல் செய்வார்கள். என்ன செய்வது? உண்மையைச் சொன்னால் பகையாகிவிடும். அப்படியே அடுத்த கொட்டாவியை அவர்களுக்கு பதிலாக விட்டு சமாளிப்பேன்.
பொதுவாக கொட்டாவி விடுவதை உடலுக்கு குறிப்பாக மூளைக்கு ஆக்சிஜன் தேவை என்று கூறுவார்கள். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. பொதுவாக சூடான சூழ்நிலையில் மூளையின் வெப்பநிலை 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே கொட்டாவி வரும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே உடலுக்கு பொருத்தமில்லாத சூழ்நிலையில் வெப்பத்தில் இருக்கும்போது கொட்டாவி நிறைய வரும்.
நன்றி - பிபிசி