விட்டமின் டி உடலுக்கு அவசியத் தேவையா?
giphy.com |
இன்று இங்கிலாந்தில் பாதிக்கும் மேலான மக்கள் விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகள் உடலின் இயக்கத்திற்கு உதவுமா? என பல கேள்விகள் சாப்பிடுபவர்களுக்கும் உண்டு. அதனைப் பார்ப்பவர்களுக்கும் உண்டு.
ஊட்டச்சத்து சந்தை என்பது 2015 இல் இங்கிலாந்தில் 414 மில்லியன் பௌண்டுகளாக வளர்ந்திருந்தது. கடந்த ஆண்டு உணவு ஏஜென்சி செய்த ஆய்வில் 48 சதவீத வயது வந்தோர் தினசரி விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
அரசு அமைப்பான என்ஹெச்எஸ், மக்கள் பனிக்காலத்தில் விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியது. ஆனாலும் கார்டியன் பத்திரிகை விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுவது உடலில் பெரியளவு மாற்றங்களை உருவாக்கவில்லை என்று கூறியது.
இங்கிலாந்தில் நாற்பது சதவீதம் பேர் விட்டமின் டி பற்றாக்குறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். விட்டமின் டியை சூரிய ஒளி மூலமே நாம் பெறுகிறோம். இச்சத்து உடலில் உணவின் மூலம் பெறும் கால்சியம் சத்தை சரியான முறையில் பெற உதவுகிறது. இச்சத்து அதிகளவில் உடலில் இருந்தால், கால்கேமியா எனும் ரத்தத்தில் கால்சியம் கலக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. சத்து குறைந்தால், எலும்புகள் எளிதில் உடையும் தன்மை ஏற்படுகிறது.
உணவு மூலம் நீங்கள் பெறும் ஊட்டச்சத்துகளே உடலில் சேர்ந்து ஊட்டம் தரும். அதற்கு பதிலீடான பொருட்கள் உடலை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்லாது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேற்சொன்ன விட்டமின் மாத்திரைகளை குறைவான அளவு எடுத்துக்கொள்வதே நல்லது.
நன்றி - பிபிசி