கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கும் வக்கீலின் போராட்டம் - தெனாலி ராமகிருஷ்ணா




Image result for tenali ramakrishna telugu movie 2019




தெனாலி ராமகிருஷ்ணா

இயக்கம் - நாகேஸ்வர ரெட்டி

ஒளிப்பதிவு - சாய் ஸ்ரீராம்

இசை - சாய் கார்த்திக்



வக்கீலின் கதை. சந்தீப் கிஷனின் தந்தை புரோக்கர். இதனால், அவரது குடும்பத்தை அந்த ஊரே தரகர் என்று அழைத்து அவமானம் செய்கிறது. இதனால் கடன்பட்டு தன் மகனை வக்கீல் படிப்பு படிக்க வைக்கிறார். சந்தீப் கஷ்டப்பட்டு படிக்கிறார். ஆனால் கேஸ்கள்தான் கிடைக்காமல் காம்ரமைஸ் செய்து காசு சம்பாதிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத அவரின் தந்தை, நீ கோர்ட்டில் வாதம் செய்து சம்பாதித்தால்தான் உன்னை என் மகனாகவே ஏற்பேன் என்கிறார். இதற்காக அவர் ஏற்கும் உள்ளூர் அரசியல்வாதி வழக்கு அவரை மேலும் பிரச்னைகளுக்குள் தள்ளுகிறது. என்னென்ன பிரச்னைகள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Image result for tenali ramakrishna telugu movie 2019



ஆஹா

சந்தீப் கிஷன், அவரின் தந்தை, முரளி சர்மா, சாய் கார்த்திக்கின் இசை, சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, குடும்ப சென்டிமெண்ட், சப்தகிரி காமெடி.


ஐய்யய்யோ

மற்ற எல்லாமும்தான். குறிப்பாக வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம். அமைதியாக இருந்து பின்னால் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்திரத்தை இறுதியாக கோமாளி ஆக்குகிறார்கள். முதல்பாதியில் இருந்த காமெடியும், ஒருங்கிணைப்பும் இரண்டாவது பாதியில் பணால் ஆகிறது. அதுவும் ஹன்சிகா கதாபாத்திரம் வீடியோ பாடல்களுக்கு மட்டுமே உதவும். முடிந்தவரை அவரை காமெடி என்ற பெயரில் வேஸ்ட் என்றே சொல்ல வைத்திருக்கிறார்கள்.

Image result for tenali ramakrishna telugu movie 2019


பெரிய ட்விஸ்ட் எல்லாம் கிடையாது. ஹீரோ தன்னுடைய தவறை திருத்திக்கொள்ள நினைக்கிறார். அதற்கான முயற்சியாக இரண்டாம் பகுதி செல்கிறது. பெரிய முயற்சிகள், ட்விஸ்டுகள் என இல்லாததால் சோளப்பொரி கொறித்துக்கொண்டே படம் பார்க்கலாம். சந்தீப் கிஷன் இதுபோன்ற படங்களைத் தேர்ந்தெடுத்தால் அவர் வசூல் ராஜாவாக மாறுவது சால கஷ்டம்.


பிரபலமான இடுகைகள்