ஓகே பூமர் சொல்லலாமா? - பெருசுக்கும் சிறுசுக்கும் லடாய் மூளுகிறது!
தொண்ணூறுகளுக்குப்பிறகு பிறந்தவர்களுக்கும், அறுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. இப்பிரச்னை தலைமுறை சிக்கலாக குடும்பங்களில் முன்னர் இருந்து வந்தது. இன்று தெருவுக்கும் வந்துவிட்டது. சிறிய வார்த்தைதான். ஓகே பூமர் என்ற வார்த்தை நேரடியாக அனைத்து வயதானவர்களுக்கும் எதிராக சொல்லப்பட்டு வருகிறது. பேபி பூமர்கள் இப்படி வார்த்தை ஆயுதம் எடுத்ததால், வயதான ஆட்கள் என்ன சொல்வதென்று பதறி நழுவி வருகிறார்கள்.
உங்களுக்கு வயசாச்சு என்று கூறுவதை இப்படி சொல்லுகிறார்கள் என மூத்த தலைமுறைக்கும் , நவீன தலைமுறைக்கும் லடாய் நீடிக்கிறது. பொதுஇடங்களில் டிவிகளில் சொல்வது வேறு. அதுவும் ஆபீஸ்களில் சொல்லிவிட்டால் என்னாவது? அண்மையில் நியூசிலாந்து சட்ட வல்லுநர் சூழல் வெப்பமயமாதல் பற்றி மசோதா பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் அவரது வாதத்தை மூத்த அதிகாரி இடைமறித்து பேசினார். உடனே ஆவேசமான இளையவர் ஓகே பூமர் சொல்லிப்பேச சங்கடம் உருவானது.
ஓகே பூமர் என்ற சொல்லைப் பேசினால் சட்டப்படி குற்றம் என்று இன்னும் அரசு கூறவில்லை. வயது ரீதியான தீண்டாமை என்பதைத் தடுக்க வெளிநாடுகளில் சட்டம் உள்ளது. இதனால் கிழட்டு பயலே என்பதிலிருந்து சில வார்த்தைகளை சொன்னால் உங்கள் மீது வழக்குப்போட்டு அபராதம் அல்லது சிறை தண்டனை பெற்றுத் தரமுடியும். இப்போது பெருசுகளை இளசுகள் இதுபோல நூதனமான புது வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதால் திட்டுகிறார்களா அல்லது விமர்சனமாக சொல்கிறார்களா என பலருக்கும் புரியவில்லை.
சிறுசுகளை வெளிநாடுகளில் ஸ்னோபிளேக்ஸ் என்று சொல்வது வழக்கம். ஓகே பூமர என்பது எங்குமே கோபமாக கூறப்படுவதில்லை. பெரும்பாலும் கேலி, கிண்டல் செய்வதற்காகவே இதுவரை பயன்பட்டு வருகிறது. இதனால் வெளிநாட்டு அரசுகள் அதனை பிரச்னைக்குரியதாக பார்க்கவில்லை. அப்படி பார்க்கும்போது இளைஞர்கள் சிறையில் அல்லது அபராதம் கட்ட நேரும்.
இளைஞர்களுக்கும் வயதாகும் என்பதை அவர்கள் சிறிது நினைத்துப் பார்த்து கிண்டல் செய்யலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆபீசில் அதிக சம்பளம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள். இப்படி உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இப்படிப்பட்டவர்களின் புகார்களை அரசு கடுமையாகவே அணுகும். எனவே பேசுவதற்கு முன்பு சற்று யோசித்துவிட்டு பேசுங்கள்.
உறவுகளின் இயல்பே உடைவதுதான். ஆனால் கேலி, கிண்டல் அடர்த்தி அதிகமானால் அவசியமான உறவுகளே உருவாகாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது.
நன்றி - தி கன்சர்வேஷன் வலைத்தளம்.