இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?
giphy.com |
மிஸ்டர் ரோனி
இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன?
இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன.
நன்றி - பிபிசி