2019ஆம் ஆண்டின் ஸ்மார்ட் நகரங்கள் இவைதான்.
ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கு வர பல்லாண்டுகள் ஆகும். அதற்கான நிதித்தேவை அதிகமாக உள்ளது. இப்போது உலகில் உள்ள ஸ்மார்ட் நகரங்களை நாம் பார்ப்போம்.
அடிஸ் அபாபா, எத்தியோப்பியா
எத்தியோப்பிய தலைநகரில் எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் மக்களுக்கான போக்குவரத்தாக ட்ராம்களை அரசு உருவாக்கியது. இதன் விளைவாக, சிறந்த வண்டி நிறுத்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக நாடெங்கும் செல்ல சிறப்பான போக்குவரத்து சேவைகளை உருவாக்கியுள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
உலகையே கொள்ளையடித்து செழிப்பான டச்சு நாடு. இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பது அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்வதைப் போலத்தான். 2009ஆம்ஆண்டு 150 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்கினார்கள். அதில் ஏராளமான தொழில் முதலீடுகளும் செய்துள்ளனர். பெரும்பாலும் இங்கு கார், பைக்குகளைவிட சைக்கிள்களையே பெரும்பாலும் போக்குரவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதாவது குறைந்த தூர போக்குவரத்திற்காக... அதிக தூரம் என்றால் ரயிலில் ஏறிவிடுவார்கள்.
ஸ்பெயின், பார்சிலோனா
ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்கால நகரங்களுகான வடிவமைப்பு, திட்டமிடலைத் தொடங்கிவிட்டார்கள். இன்று குப்பைத்தொட்டி, மின் விளக்குகள், ட்ராஃபிக் சென்சார் முதற்கொண்டு அனைத்தையும் நவீனம் செய்துவிட்டனர்.
சிகாகோ, அமெரிக்கா
பிறநாடுகளை அழித்தாலும் தனது நாடு என்று வரும்போது வா தங்கமே என்று பார்த்துகொள்வது அமெரிக்கர்களின் வழக்கம். பெயரில் மட்டும் ஸ்மார்ட் இல்லாமல் செயலிலும் ஸ்மார்ட்டாக வேலை பார்ப்பது இவர்களின் பாணி. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகளை சிகாகோ நகரில் நிறுவி ஸ்மார்ட் நகரமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் எப்போதும் போல லூசுத்தனமாக துப்பாக்கியை எடுத்து அடுத்தவர்களை சுட்டுக்கொல்கிறார்கள். மனிதர்களின் மூளையும் கொஞ்சமேனும் நகரங்களுக்கு ஏற்ப நாகரிகமாக மாறினால் நன்றாக இருக்கும்.
டென்மார்க், கோபன்ஹேகன்
இந்த ஊர்க்கார ர்கள் செய்த உருப்படியான விஷயம், கார்களை ஓட்டுவதை நிறுத்தியதுதான். இங்கு இரண்டு கி.மீ நீளத்திற்கு கடைகள் உண்டு. ஆனால் காரில் வந்து நம்மூர் போல திமிருடன் பேரம் பேச முடியாது. நடந்து வருபவர்களுக்கும், சைக்கிளில் வருபவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி. நகரம் தொடர்பான செய்திகள் அரசால் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஃப்யூகுகா, ஜப்பான்
ஜப்பானின் பிரபலமான ஸ்டார்ட்அப் நகரம். வாழ்வதற்கு சிறந்த நகரமான பல்வேறு இதழ்களில் தேர்ந்தெடுக்கப்படும் அளவு வசதிகளும், எளிமையும், டெக் வசதிகளும் கொண்ட நகரம் இது.
ஹெல்சின்கி, ஃபின்லாந்து
நோக்கியா எனும் மகத்தான செல்போன் நிறுவனத்தை உலகிற்கு கொடுத்த நாடு. கல்வியில் சிறந்த மாணவர்களைக் கொண்டுள்ளவர்களும் இவர்கள்தான். நல்ல கல்வி நல்ல குடிமக்களை உருவாக்கும். நகரமும் அப்படித்தானே இருக்கும். தானியங்கி நுட்பத்தை நோக்கி இந்நகரம் நகர்ந்து வருகிறது. இங்குள்ள கார்களை ஓட்டுநர்கள் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் கிடையாது. எனவே ஏ.ஐ. சற்று துல்லியமானால் இங்கே ஓடத்தொடங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
நன்றி - நியூஸ் வீக்