உயிரியல் போரில் நண்பரை பறிகொடுக்கும் அயர்ன்மேன்!
அயர்ன்மேன்
தி ரைஸ் ஆப் தி டெக்னோவோர்ஸ்
அனிமேஷன்
இயக்கம் - ஹிரோஷி ஹமசாகி
கதை -பிராண்டன் ஆமன்
டோனி ஸ்டார்க் உருவாக்கும் ஆய்வகத்தை உயிரியல் முறையில் எதிரி தரைமட்டமாக்குகிறான். கூடுதலாக அவரின் போலீஸ் தோழனும் இத்தாக்குதலில் அடிபட்டு படுகாயமுற்று கோமாவில் கிடக்கிறார். இதற்கு டோனி எப்படி பழிவாங்குகிறார். இவரை கண்காணிக்கும் ஒற்றை கண் மேனேஜரின் இடைஞ்சல்களை சமாளித்து உலகை காக்கிறார் என்பதுதான் கதை.
ஏராளமான கட்டிடங்களை அனிமேஷன்களில் உடைத்தெறிகிறார் டோனி. தொடரின் ஆரம்பத்தில் அவரும் போலீஸ் நண்பரும் போட்டி போட்டுக்கொண்டு வானில் பறக்கிறார்கள். செல்லமான யார் பெரியவன் என்கிற போட்டிதான். ஆனால் அங்கு வந்து தாக்கும் டெக்னோவோர்ஸ், ஏவ வைத்திருந்த ராக்கெட்டையும் தன் இஷ்டம் போல ஏவுகிறான். டோனி உட்பட ஒட்டுமொத்த அவெஞ்சர்களையும் செயலிழக்க வைக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பதே கதை.
முதல் இரண்டு காட்சிகளிலேயே டோனியின் நண்பர் ஜான் ரோடிஸ், உயிரியல் தாக்குதலில் இறந்துபோகிறார். அதற்கு பழிதீர்க்க டோனி திரும்புகிறார். ஆனால் சட்டம் தடுக்கிறது. அப்புறம் என்ன அதை மீறுவதோடு, பனிஷரின் உதவியை நாடுகிறார். அவெஞ்சர்கள் டோனிக்கு எதிராக திரும்புகிறார்கள். யார் வென்றது என்பதுதான் கிளைமேக்ஸ் காட்சி.
சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். வேகேஷன் போன அசிஸ்டெண்டை தண்ணீரில் நனைத்து காய வைத்து டோனி கூட்டி வருகிறார்.
கோமாளிமேடை டீம்