ஓவியர்கள் எப்படி மிகச்சிறப்பாக வரைகிறார்கள்- உளவியல் ஆய்வு



"Study of Arms and Hands" by Leonardo da Vinci, 1474.






மிஸ்டர் ரோனி 


சிலர் எப்படி பிறரை விட இயல்பாக நன்றாக வரைகிறார்கள்?

காரணம் சூழலை அவர்கள் வேறுமாதிரி பார்ப்பதுதான். அவர்களின் பார்வையில் ஒருவரின் உருவத்தை அவர்கள் வரைவதற்கான விஷயங்களாக பார்க்கிறார்கள். டாவின்சியை விடுங்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ள ஓவியர் பி, தனக்கு லீவு வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் எனது உருவத்தை வரைந்து லீவு சொல்லி பீதியைக் கிளப்பினார். 

ஜாலியான பென்சில் ஸ்கெட்ச்தான். பிரமாதமாக உருவத்தை மனதில் பதித்து வரைந்திருந்தார். ஆனால் நான் அதே உருவத்தை வரைந்தால் என்னாகும்? பலமணிநேரம் பிடித்தாலும் அதே உருவத்தை என்னால் கொண்டுவரமுடியாது. பல உருவங்களுக்கும் போலியா கை, கால்களைத்தான் என்னால் வரைய முடியும். இதுபற்றி எப்போதும் போல வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி செய்திருப்பார்களே? அதைத்தான் தேடப்போகிறோம். 

ஓவியர்கள்  முதலில் பொருட்களின் அளவை தீர்மானிக்கிறார்கள். கேன்வாசின் சைஸூம் இதில் முக்கியம். பின்னர் தாங்கள் பார்த்த விஷயங்களை எப்படி நினைவு கொள்கிறார்கள் என்பதும் இதில் முக்கியம்.  எதை அவர்கள் தேர்ந்தெடுத்து வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டுதான் வரைந்து தள்ளி சாதிக்கிறார்கள். 


இதுபற்றி சைக்காலஜி ஏஸ்தடிக்ஸ் இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில் ஓவியர்கள் செய்யும் பயிற்சிகளை முக்கியமான திறனாக குறித்துள்ளனர். இதுவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்களை எளிமையாக வரையவும், அதன் அளவைக் கணிப்பதில் கூர்மையையும் அளிக்கிறது. 

நன்றி - லிவ் சயின்ஸ்