கண்களை நீலநிற ஒளி பாதிக்கிறதா?



மிஸ்டர் ரோனி

நீல நிற ஒளி தூக்கமின்மைக்கு காரணமா?

இன்று போன், கணினி என பல்வேறு டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில்தான் படிக்கிறோம். சிரிக்கிறோம். சம்சாரிக்கிறோம். இதன் பாதிப்புகள் பார்வை இழப்பு, தூக்கமின்மை என்று கூறுகிறார்கள். உண்மையா? நிச்சயம் இல்லை.

எலிகளிடம் இதுபற்றி சோதனை நடத்தப்பட்டது. அதிக செறிவிலான நீலநிற ஒளிக்கதிர்கள் அவற்றின் பார்வைத்திறனை பாதித்த து உண்மைதான். ஆனால் மனிதர்களின் விஷயத்தில் இது மாறுபட்டது. உண்மையில் சூரியனிலிருந்து வெளிவரும் நீலநிற ஒளி என்பது மிக அதிகம். அதை எப்போதேனும் பார்த்திருப்பீர்கள். அதைவிட கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ஆகியவை குறைவான ஒளியைக் கொண்டவை.அவை எப்படி உங்கள் பார்வையைப் பாதிக்கும்?

இதன் பொருள் அவை பாதிக்காது என்பதல்ல. அதன் அலைநீளம் இதில் முக்கியமானது. கண்களிலுள்ள அமைப்பு இயல்பாகவே நீலநிறத்தை தடுக்கும் திறன் கொண்டது. குளிர்கண்ணாடிகள் கண்களின் பாதிப்பைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். கண்களிலுள்ள ஆர்பிசிசி எனும் செல்கள் கணினியிலுள்ள நீலநிற ஒளியைப் பார்த்து விழித்திருக்கலாம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால்தான் பலருக்கும் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது.

என்ன செய்யலாம்?

கொஞ்சம் முன்னாடியே படம் பார்ப்பதை முடித்துவிட்டு, ஏதாவது எதிர்வெளியீடுகளை படிக்கலாம். சிறந்த தூக்கத்திற்கு பேரா.வின்சென்ட் எழுதிய புத்தகங்களை படிக்கலாம். ஒன்றுமே புரியாமல் தூக்கம் வந்துவிடும்.

ஒரு நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை நாம் கண்சிமிட்டுகிறோம். இது வீடியோ பார்க்கும் வெறியில் ஆறாக குறைந்துவிடுகிறது. எனவே கண்கள் காய்ந்து போனால் பிரச்னை தொடங்குகிறது என்றுதானே அர்த்தம்.

நன்றி - க்யூரியாசிட்டி