மொழியை வளர்க்க சில நூல்கள்! - புத்தகம் புதுசு!
மொழி இல்லையென்றால் நாம் எப்படி செயல்படுவோம்? தமிழோ, இந்தியோ உள்நாட்டுப் போட்டியை விடுங்கள். அடிப்படையில் தகவல் தொடர்புக்கு மொழி என்று ஒன்று தேவை இல்லையா? இதைத் தீர்த்துவைக்கும் மொழி பற்றிய புத்தகங்கள் உங்களுக்காக இதோ.
Because Internet by Gretchen McCulloch
இன்று உங்கள் நண்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகிறீர்கள்.அதில் ஓகே என்பதுற்கு k என்று மட்டும்தான் பதில் வரும். காரணம், இணைய உலகம் அப்படி மாறி வருகிறது. அதுபோன்ற மொழிமாற்றம் முக்கியமானதும் கூட. தகவல்தொடர்பின் வடிவம் மேம்பட்டு வருவதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதன்மூலம் மில்லினிய ஆட்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை நம் புரிந்துகொள்ள முடியும்.
Language Unlimited by David Adger
ஆங்கிலம், பிரெஞ்சு என பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள் என்றாலும் பொதுவாக அம்மொழியைப் புரிந்துகொள்வதற்கென இலக்கணம் உள்ளது. இதில் சில அம்சங்கள் ஒன்றுபோலவே இருக்கும். அதுபோல விஷயங்களை ஆசிரியர் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார்.
Extraterrestrial Languages by Daniel Oberhaus
நாம் மனிதர்களுடன் பேசினால் மட்டும் போதுமா? மோர்ஸ் கோட் முறையில் அயல் கிரக ஆட்களுடன் எப்படி பேசுகிறார்கள், அதற்கான மொழி, முறைகளை ஆசிரியர் பகிர்ந்துகொள்கிறார்.
Changing Minds by Roger Kreuz and Richard Roberts
இளம் வயதில் ஒருவர் கதை சொல்வதை விட வயதானவர்கள் கதைசொல்லும்போது அது நன்றாக சரியான முடிவைக் கொண்டதாக இருக்கும். எப்படி? வயதானாலும் மொழியைக் கற்பது என்பது தொடர்ந்து வருவதுதான் காரணம். இதுபற்றிய நாம் அறியாத பல்வேறு விஷயங்களை இந்த நூல் கூறுகிறது.
நன்றி - பிபிசி
நன்றி - பிபிசி