செக்ஸ் ஃபேன்டஸி - நிர்வாணம் தேடிய ஜெர்ரி புருடோஸ்!
அசுரகுலம்
ஜெர்ரி புருடோஸ்
ஜெர்ரிக்கு பெண்கள் என்றால் பிடிக்கும். அவருடைய அம்மாவுக்கு ஜெர்ரியை பெண்ணாக பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஈடேறவில்லை என்ற வருத்தம் இருந்தது.இதனால் அவர் வளரும்போது அவருக்கு தாய், மகன் பாசமெல்லாம் இருக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தாய், மகனை அடித்து உதைத்தார். இதன் விளைவு என்னானது தெரியுமா? சிறியவயதிலிருந்து பெண்களின் ஷூக்களை திருடத் தொடங்கினார். ஜெர்ரி. பின்னர் பெண்களின் உள்ளாடைகள் மீது காதல் பிறக்க, அவையும் திருடுபோயின.
இதெல்லாம் அவருக்கு ஒருகட்டத்தில் போதவில்லை. பெண்களை அடித்து உதைத்து வல்லுறவும் கொள்ள ஆரம்பித்தார். இதன்விளைவாக சிறைக்கும் சென்றார். இவரின் வினோத பழக்கத்தை கண்டறிந்த போலீஸ், அவரை மனநல மருத்துவமனைக்கு பேக் செய்தது. சிசோபெரேனியா எனும் உளவியல் பாதிப்பு ஜெர்ரிக்கு இருந்தது.
1939 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி, தெற்கு டகோடா பகுதியைச் சேர்ந்தவர். 1957 இல் படித்து எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர் ஆனார். அப்போது பதினேழு வயதான பெண்ணை திருமணம் செய்தார். மனைவி வீட்டுவேலைகள் செய்யும் நிர்வாணமாகத்தான் பணி செய்ய வேண்டும். அப்போது காலில் ஹீல்ஸ் மட்டும் அணிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. வீட்டில் கீழறையில் நிறைய பெண்களை அடித்துக்கொன்று செக்ஸ் வைத்துக்கொண்டு உடலை துண்டு போடும் காரியங்களைச் செய்து வந்தார். இதன் விளைவாக அங்கு மனைவி இன்டர்காமில் தகவல் கூறிவிட்டே உள்ளே வரமுடியும் என ஜெர்ரி ரூல்ஸ் போட்டார்.
என்சைக்ளோபீடியா விற்க வந்த பெண்ணை மண்டையில் அடித்து சுயநினைவைப் போக்கி கொன்றார். பின்னர் அவரின் இடது காலை வெட்டி வைத்துக்கொண்டார். கால் மட்டுமல்ல சில பெண்களின் மார்பகங்களை அறுத்து ஃப்ரீசரில் வைக்கும் பழக்கமும் இவருக்கு வந்தது. போலீசில் பிடிபட்டவர் மூன்று ஆயுள்தண்டனை பெற்றார். பின்னர் 2006 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் இறந்துபோனார்.
வின்சென்ட் காபோ
நன்றி - கிரிமினல் மைண்ட்ஸ் வலைத்தளம்.