சரச சல்லாப வீடியோ - கல்யாண நாளில் என்னாகும் நிலைமை?
மீக்கு மாத்திரம் செப்தா - தெலுங்கு
இயக்கம் - சமீர் சுல்தான்
ஒளிப்பதிவு - மதன் குணதேவா
இசை சிவகுமார்
போனில் செய்யும் சிறிய தவறு எப்படி கல்யாண நாளில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள்.
தருண் பாஸ்கர் இயக்காமல் நடித்திருக்கிற படம். படத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் இவரும், அபினவ்வும் செய்யும் காமெடிகள்தான் படத்தைப் பார்க்க வைக்கின்றன.
பட வாய்ப்புக்காக தருண் ஒரு உப்புமா இயக்குநரை சந்திக்கிறார். அந்த சமாச்சாரம் நடக்கும் வரையில் அவர் உப்புமா ஆள் என தருணுக்கு தெரியாது. படத்தில் தருணின் பெயர் ராகேஷ். அங்கு பார்த்தால், ஒரு பெண், ஒரு பெட், ஒரு லைட் என எல்லாம் மினிம மாகவே இருக்கிறது. யெஸ் ராத்திரி வீரன் ரக படம்தான். இதுதெரியாத தருண், காலை நீட்டிப்போட்டு... பெட்டில்தான். படுத்து தூங்கிவிடுகிறார். ஏசி காற்று தூக்கத்தை அள்ளித்தருகிறது. இவருக்காக சாப்பிட சோறு எடுத்துவரச் சென்ற பெண், இதனால் டென்ஷன் ஆகிறாள். அதனால் என்ன செல்போன் கேமராவை திருப்பிவைத்து உறங்கும் நிலையில் இயக்குநர் சொன்ன சமாச்சாரத்தை முடிக்கிறார். இதையும் இணையத்தில் வேறு போட்டுவிட, பிரச்னை வெடிக்கிறது.
தருணின் டாக்டர் பெண்தோழி. முதலிலேயே டெர்ம் இன்சூரன்ஸ் ஏஜண்ட் போல தண்ணி அடிப்பியா, போதைப்பொருள் பழக்கம் உண்டா, செக்ஸ் மேட்டர்ஸ் ஏதாவது என அத்தனை விஷயங்களிலும் டிக் மார்க் போட்டு பின்னர்தான் டேட்டிங் மேட்டருக்கே சரி பார்ப்போம் என பாஸ் போடுகிறார். அவருக்கு தருணின் சரச சல்லாப மேட்டர் தெரிந்தால் என்னாகும்? கதை நகருவதே அதை நோக்கித்தான். அந்த வீடியோவை அழிக்க வேண்டும். எப்படி அழிக்கிறார்கள். அதற்கு உதவ வரும் பாப்பா எனும் ஹேக்கர் செய்யும் அட்டூழியம், இதற்கிடையில் காதலிக்காக உளவு பார்க்கும் முன்னாள் காதலன் என நிறைய கதாபாத்திரங்கள்.
படத்தின் பட்ஜெட் தக்கணூன்டுதான். அதிலும் சிறப்பாக முயற்சித்து படத்தை எடுத்தே விட்டார்கள். இசை, கேமிரா என இரண்டுமே இயக்குநர் சொல்ல நினைத்த கதையை சிறப்பாக புரிய வைத்துவிடுகின்றன.
கிளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட்தான் படத்தை அப்படியே மாற்றுகிறது. எதாகிலும் சரி. குறைந்த கதாபாத்திரங்களோடு நிறைந்த காமெடிப்படம் இது. ரொம்பவும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே இளைஞர்களுக்கான லைன்கள். எனவே டைமிங் காமெடியாக அதிர வைக்கிறது.
கோமாளிமேடை டீம்