காபி குடித்தால் உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படுமா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
டீ, காபி குடித்தால் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுமா?
சேட்டன் கடை டீ குடித்தாலும் சரி, சாய் கிங்ஸில் போய் டெட்ரா பேக்கில் டீ வாங்கி எலைட்டாக குடித்தாலும் சரி. அதைக்குடித்த சிறிது நேரத்தில் மடியிலிருந்து கனம் இறங்குவதைப் போலத் தோன்றும். தனித்தமிழில் சிறிது நேரம் காத்திருங்கள் தோழா. சிறுநீர் சிந்திவிட்டு வருகிறேன் என்று செல்லவேண்டி வரும். காரணம். அதிலுள்ள காஃபீன். இதனால்தான் உயர்தர சுவையில் கோத்தாஸ் காபி, லியோ காபி குடித்தாலும் மூத்திரம் பிய்த்துக்கொண்டு போகிறது. எனவே டீ குடியுங்கள். கூடவே அம்மா குடிநீரையும் குடியுங்கள். விரைவில் உங்களுக்கே தெரிந்துவிடும் எது சிறந்தது என்று.
நன்றி - பிபிசி