சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?
மிஸ்டர் ரோனி
சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?
சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது.
நன்றி - பிபிசி