இடுகைகள்

trump லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஸ் கார்ப் - ஊடக குழுமத்திற்கு வரும் புதிய வாரிசு

  நியூஸ் கார்ப் - ஊடக குழுமத்திற்கு வரும் புதிய வாரிசு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் செய்தி ஊடகங்களை நடத்தி வந்த ரூபர்ட் முர்டோக் பற்றி பலரும் அறிவார்கள். வலதுசாரி தாராளவாத கருத்துக்களைக் கொண்ட ஊடக முதலாளி. இவர் இப்போது ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார். இவருக்கு அடுத்து மகன் லாச்லன் தனது 52 வயதில் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றவிருக்கிறார். ஃபாக்ஸ் கார்ப், நியூஸ் கார்ப் என இரண்டு நிறுவனங்களின் தலைவராக லாச்லன் பொறுப்பேற்கவிருக்கிறார். 2019ஆம் ஆண்டே இவரை முர்டோக் தனது வாரிசு என்பதாக கூறிவிட்டார். இந்த வாய்ப்பை லாச்லன் பயன்படுத்திக்கொண்டு எப்படி தன்னை நிரூபிக்கிறார் என்பதே முக்கியமான விஷயம். லாச்லன் லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். பதினெட்டு வயதில் தனது அப்பாவின் ஊடக நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். பிறகு நான்கு ஆண்டுகளில் தனக்கென தனி பத்திரிகையை உருவாக்கி குயின்ஸ்லாந்தில் இயங்கினார். பிறகு 34 வயதில் நியூஸ் கார்ப்பின் அதிகாரம் வாய்ந்த மூன்று அதிகாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். அமெரிக்காவில் இயங்கிய ஃபாக்ஸ் டிவி சேனல்கள், நியூயார்க்