இடுகைகள்

கிரிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலில் காதலியைக் காப்பாற்றிவிட்டு பிறகு காட்டைக் காப்பாற்ற முயலும் வன அதிகாரி - கொண்டா பொலம் - கிரிஷ்

படம்
  கொண்டா பொலம்   இயக்குநர் கிரிஷ்   குடிமைத் தேர்வுகள் எழுதிய பிற்படுத்தப்பட்ட பழங்குடியை ஒத்த சாதி இளைஞர், தனது கதையை அதிகாரிகளிடம் சொல்லுகிறார். அவரது நினைவுகளின் வழியே கதை பயணிக்கிறது. வைஷ்ணவ் தேஜின் –( சின்னவன்) வாழும் ஊரின் வேலையே ஆடு மேய்த்து பிழைப்பதுதான். ஆனால் அவனது அப்பா, ஆடுகளை விற்று அவனை பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். இதன்மூலம் அவன் நகரத்தில் போய் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறார். ஆனால் படித்த ஐடி படிப்பும், வாயில் நுழையாத ஆங்கிலமும் சின்னவனை வேலையில்லாத பட்டதாரியாக்குகிறது. இந்த நிலையில் அவன் திரும்ப கிராமத்துக்கு வருகிறான். ஆடுகளை மேய்க்கப் போவதற்கு ஆட்கள்   குறைய,   அவனும் ஆட்களோடு மலைக்கு செல்கிறான். அங்கு சென்று சில மாதங்கள் தங்கி ஆடுகளை மேய்த்து கூட்டி வர வேண்டும். இந்த பயணத்தில் அவன் விலங்குகளை மேய்ப்பதோடு காட்டுக்குள் உள்ள பல்வேறு சதிகார மனிதர்களையும், ஆடுகளை தின்னும் புலியையும் சந்திக்கிறான். பள்ளித்தோழி ஓபுலம்மா மூலம் சின்னவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அதில் காதலும் ஒன்று. அவனுக்கு காதலை விட முக்கியமானதாக காடுகளில் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்ட