இடுகைகள்

காதலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

படம்
  ரா ராஜூ (2006) தெலுங்கு கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை. வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான். கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன். எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும

காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா

படம்
                  பாவகாரு பாகுன்னாரா சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல் இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி இசை மணி சர்மா வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார். கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு 1,280 × 720 கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்..  இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்த

சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா

படம்
                 டிஸ்கோ நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர் தெலுங்கு கதை, இயக்கம் - ஹரி கே சந்தூரி டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை. படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அ

தனது காதலி செய்த கொலையை கணித அறிவால் மறைக்கும் கணித ஆசிரியர்! - தி பர்ஃபெக்ட் நம்பர் - தென் கொரியா

படம்
பர்ஃபெக்ட் நம்பர் (2012) பர்ஃபெக்ட் நம்பர் தென்கொரியா ஜப்பான் எழுத்தாளர் எழுதிய தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலைத் தழுவிய படம்.  ஒரு பெண் செய்த கொலையை அவளை விரும்பும் கணித ஆசிரியர் எப்படி மறைக்கிறார். அந்த முயற்சியில் தன்னை எப்படி எரித்துக்கொள்கிறார் என்பதே கதை.  சிறு வயதிலிருந்து கணிதம் தவிர வேறெதையும் கண்டுகொள்ளாதவர்தான் நாயகன். நட்பு, காதல் என எதுவுமே அவருக்கு அமையவில்லை. கணிதம் சார்ந்த சிக்கல் முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறார். நண்பன் மீது சந்தேகம் கொள்ளும் டிடெக்டிவ்  தினமும் எழுந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வது, அங்கு செல்லும் வழியில் உள்ள கடையில் மதிய உணவை வாங்குவது என வாழ்க்கை செல்கிறது. மதிய வாங்கும் இடத்தில் வேலை செய்யும் பெண்ணை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார். அந்தப் பெண், திருமணமாகி விவகாரத்தானவர். அவர் தனது உறவினர் குழந்தையுடன், கணித ஆசிரியரின் அறைக்கு அருகில் தங்கியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுக்கு முன்கதை உள்ளது. அது சோகமான வருத்தக்கூடிய கதை. அதிலிருந்து தப்பிக்கவே அவர் சியோலுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் நாம் மறக்க

கோவிட் டிக்ஷனரி 2021 - என்ன கற்றுக்கொண்டோம்?

படம்
டேட்டிங் அகராதி ஃபியர் ஆப் டேட்டிங் அகெய்ன் பெருந்தொற்று காரணமாக காணாமல் போன உறவை மறுபடியும் டேட்டிங் செய்து மீட்டெடுக்க முடியுமா என்று மனதில் ஏற்படும் பயம்.  கோவிடேட்டட் கோவிட் காரணமாக டேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், டேட்டிங்கை நிறுத்தி வைப்பது. ஹார்ட்பாலிங் உறவில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பது. அந்த உறவை தீவிரமாக எடுத்துக்கொள்வது.. டபுள் வேக்ஸ்டு இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள் ஜூம்பிங் சிம்பிளாக ஜூம் காலில் பிரேக்கப் சொல்லுவது, காதலித்தவரை தூக்கி எறிவதை இப்படி சொல்லலாம்.  செக்ஸ் டிஸ்டன்சிங் கொரோனாவைக் காரணம் காட்டி செக்ஸ் வேண்டாம் என நழுவுவது... சாப்ட் கோஸ்டிங் மணிரத்னம் பட பாத்திரம் போல கொஞ்சூண்டு பேசுவது. அதிலும் இமோஜி, சோசியல் மீடியா மீம் என பலவற்றையும் பயன்படுத்துவது..  அதாகப்பட்டது ஒருவரை முழுமையாக இன்னும் கழட்டிவிடவில்லையாம்.  ஆர்பிட்டிங் முன்னாள் காதலரை பின்தொடர்ந்து என்ன செய்கிறார் என பார்ப்பது.. இல்லை சில சிக்னல்களை கொடுத்து அவரே புரிந்துகொள்ளமுடியாமல் ஃபாலோ செய்ய வைப்பது... கோவிட் பேக்கேஜ் பெருந்தொற்று காலத்தில் ஒருவருடன் பேசுவீர்கள். ஆனால் அது உண்மையான

முன்னாள் காதலியின் காதலை சேர்த்துவைத்து தன்னுடைய காதலைக் காப்பாற்றும் நாயகனின் கலாட்டா கதை! - அல்லுடு அதுர்ஸ் - சாய் சீனிவாஸ்

படம்
                அல்லுடு அதுர்ஸ்    Director: Santosh Srinivas Produced by: Gorrela Subrahmanyam Writer(s): Santosh Srinivas, Srikanth Vissa (Dialogues) படத்தின் கதை என்று பார்த்தால் , காதலே செட் ஆகாது என்று நினைத்து விரக்தி அடைந்தவனுக்கு ஏற்படும் காதலும் , அதில் ஏற்படும் பிரச்னைகளும்தான் . எளிமையான லைன்தான் . ஆனால் படத்தை எடுக்கும் இயக்குநருக்கு என்ன குழப்பமோ , சோறு வைக்க நினைத்து அதற்குள் நூடுல்ஸை வேக வைத்து பருப்பு குழப்பில் சாஸ் ஊற்றி படத்தை எடுத்திருக்கிறார் . இதனால் படத்தில் எந்த காட்சியும் நிறைவு தரவில்லை . சாய் சீனிவாஸ் நடித்த சீதா என்ற தெலுங்குப்படம் பலரும் தெலுங்குப்படம் என்றால் இப்படித்தானா எனும்படி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள் . அந்த நேரத்தில் இப்படியொரு படமா ? பெரிய சறுக்கல் . சீனு , பள்ளி செல்லும்போது வசுந்தரா என்ற சக மாணவியை ப் பார்க்கிறான் . அவள் செய்யும் உதவிகளால் மெல்ல ஈர்க்கப்படுகிறான் . ஆனால் அது காதலாக மெல்ல மாறும்போது அவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறாள் . இந்த நேரத்தில் இனி பெண்களே வேண்டாம் என வே

மூன்றாம் உலக முத்தமா?

படம்
கிஸ் கதை! மாலை நேரம். காதலியோடு நடக்கிறீர்கள். எதையோ சொல்ல நினைக்கிறீர்கள். மெல்லிய புன்னகையோடு ஒரக்கண்ணால் காதலியைப் பார்க்கிறீர்கள். பெண்கள் 360 டிகிரியில் அனைத்தும் அறிவார்களே! உங்களது  அசட்டுத்தனத்தைப் பார்த்தபடி உதடு கடித்து இன்னும் ஏண்டா லேட் என படபடப்பாக பார்க்கிறார். அவரின் இதயத்துடிப்பு மெல்ல உங்களுக்குக் கேட்கிறது. அப்போது நீங்கள் நடந்துசெல்லும் இடம் கார்னரை எட்டுகிறது. அங்கு சோடியம் வேபரின் தொந்தரவு கூட இல்லை. என்ன நடக்கும்? வாய்ப்பை துணிச்சலாக பயன்படுத்துகிறீர்கள்?  மெல்ல தலைசாய்த்து இதழோடு இதழ் ஒட்டி எடுக்கிறீர்கள். மெல்ல ம் என திணறி முழுக்க ஒப்புக்கொடுக்காமல் பின்னர் உங்கள் கைகளுக்கு இதமாக அர்ப்பணித்து காதலியும் நிற்கிறார். இதை நீங்கள் பென்சன் வாங்கும் காலத்தில் நினைத்தாலும் எப்படி நடந்த து என நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதற்கு காரணம் நமது முன்னோர்கள்தான் என்பதால் மடத்தனம் என்றோ முட்டாள்தனம் என்றோ நினைப்பதை தூரம் தள்ளி வையுங்கள். தொன்மைக்காலத்தில் தாய் உணவை அரைத்து மென்று வாய் வழியாக குழந்தைக்கு கொடுப்பதே பழக்கம். இதுதான் முத்தமாக மாறி இன்றைக்கும் ச