கோவிட் டிக்ஷனரி 2021 - என்ன கற்றுக்கொண்டோம்?
டேட்டிங் அகராதி |
ஃபியர் ஆப் டேட்டிங் அகெய்ன்
பெருந்தொற்று காரணமாக காணாமல் போன உறவை மறுபடியும் டேட்டிங் செய்து மீட்டெடுக்க முடியுமா என்று மனதில் ஏற்படும் பயம்.
கோவிடேட்டட்
கோவிட் காரணமாக டேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், டேட்டிங்கை நிறுத்தி வைப்பது.
ஹார்ட்பாலிங்
உறவில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பது. அந்த உறவை தீவிரமாக எடுத்துக்கொள்வது..
டபுள் வேக்ஸ்டு
இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள்
ஜூம்பிங்
சிம்பிளாக ஜூம் காலில் பிரேக்கப் சொல்லுவது, காதலித்தவரை தூக்கி எறிவதை இப்படி சொல்லலாம்.
செக்ஸ் டிஸ்டன்சிங்
கொரோனாவைக் காரணம் காட்டி செக்ஸ் வேண்டாம் என நழுவுவது...
சாப்ட் கோஸ்டிங்
மணிரத்னம் பட பாத்திரம் போல கொஞ்சூண்டு பேசுவது. அதிலும் இமோஜி, சோசியல் மீடியா மீம் என பலவற்றையும் பயன்படுத்துவது.. அதாகப்பட்டது ஒருவரை முழுமையாக இன்னும் கழட்டிவிடவில்லையாம்.
ஆர்பிட்டிங்
முன்னாள் காதலரை பின்தொடர்ந்து என்ன செய்கிறார் என பார்ப்பது.. இல்லை சில சிக்னல்களை கொடுத்து அவரே புரிந்துகொள்ளமுடியாமல் ஃபாலோ செய்ய வைப்பது...
கோவிட் பேக்கேஜ்
பெருந்தொற்று காலத்தில் ஒருவருடன் பேசுவீர்கள். ஆனால் அது உண்மையான உறவாக இருக்ககாது.
அபோகலிப்சிங்
பார்த்தவுடனே ஒருவருக்கு கையில் நூறுரூபாய் கொடுக்குமளவு வெகுளியாக பழகி உறவில் மாட்டிக்கொள்வது.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக