எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

 



Interview with Mridula Ramesh - Renewable Watch

HACHETTE




நூல் அறிமுகம்


தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ்

சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன்

நியோகி புக்ஸ்

350

மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம். 

anshul chaturvedi Books, Buy anshul chaturvedi Books Online at Best Prices  In India - sapnaonline.com


எ பேர்ட் ஃபிரம் அஃபார்

அன்சுல் சதுர்வேதி

பான் மெக்மில்லன்

399

1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது. 


INTERVIEW: Lemony Snicket (Daniel Handler) chats new book Poison for  Breakfast with Bex! - Fun Kids - the UK's children's radio station


பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட்

லெமோனி ஸ்னிக்கெட் 

ஒன்வேர்ல்ட்

499

எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 


A future with no books in it, is a future that we must rise against: author  Arpit Bakshi - Times of India

தி எக்ஸைல் ஆப் முகுந்தா

ஆர்பிட் பக்ஷி

ஆலெப் புக் கம்பெனி

395

மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போது அவரின் நாட்டிலிருந்து பிரித்து வரப்பட்டு எதிரிகளின் பிடியில் உள்ளார். அவரின் காதலியே அவருக்கு துரோகம் செய்கிறாள். இந்த நிலையில் அவர் என்ன செய்தார், தனது தந்தையைக் கண்டுபிடித்தாரா என்பதை பேசுகிறது நூல். 

On World Water Day 2021, taking a walk through Delhi and understanding its  shifts of history through water-Art-and-culture News , Firstpost

வாட்டர்ஷெட்

மிருதுளா ரமேஷ்

ஹாசெட் இந்தியா

699

சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை எப்படி இருந்தது என்பதை நூல் ஆராய்கிறது. பல்வேறு அணைகள் எப்படி கட்டப்பட்டன, அதன் விளைவாக மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பேசும் நூல், எதிர்காலத்தில் ஏற்படும் நீர் தட்டுப்பாட்டையும் சுட்டுக்காட்டுகிறது. 






இந்து ஆங்கிலம்


கருத்துகள்