கொசுவினால் எய்ட்ஸ் பரவாதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

How Many Hearts Does An Octopus Have? - WorldAtlas

 பதில் சொல்லுங்க ப்ரோ?

சிரிஞ்சின் ஊசி மூலம் எய்ட்ஸ் பரவுகிறது என்றால் கொசு மூலம் ஏன் பரவாது?

சிரிஞ்சிலுள்ள ஊசியைப் பயன்படுத்தி எய்ட்ஸ் உள்ளவருக்கு பயன்படுத்தி அதனை தூய்மைப்படுத்தால் அடுத்தவருக்கு பயன்படுத்தினால் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  ஊசியில் ஏற்கெனவே உள்ள டி செல்களைப் பயன்படுத்தி வைரஸ் கிருமி தன்னை பெருக்கிக்கொள்ளும். இதனை பயன்படுத்துபவரின் உடலிலும் உடனே டி செல்களை தனக்கான ஊடகமாக பயன்படுத்தி பெருகத் தொடங்கும். கொசுவின் உடலில் எய்ட்ஸ் வைரஸ் சென்றாலும், அதற்கு டி செல்கள் அங்கு கிடைக்காது. எனவே அதன் செரிமான அமைப்பில் சேர்ந்துவிடும். மலேரியா ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் கொசுவின் வயிற்றில் ஏராளமாக பெருகுகின்றன. ஸ்போரோஸொய்டஸ் எனும் இவை, எளிதாக கொசுவின் எச்சிலில் கலந்து மனிதர்களை தாக்குகிறது. 


15 Pack Blunt Tip Syringe Glue Syring 20ml 10ml 5ml 3ml 1ml Glue Syringe  Syringes For Oil Glue Applicator Science Lab|Epoxies| - AliExpress

ஆக்டோபஸ் எப்படி அடிக்கடி நிறம் மாறுகிறது?

செபாலோபாட்ஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் ஆக்டோபஸ், ஸ்குவிட், கடில்ஃபிஷ் ஆகிய உயிரினங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை, எதிரிகளை எச்சரிக்க அடிக்கடி உடலின் நிறம் மாற்றும் என்பதுதான். இவற்றின் உடலில் நிறம் மாற்றும் நிறமிகள் உண்டு. இதற்கு, குரோமடாபோர்ஸ் என்று பெயர். ஆக்டோபஸ் தனது உடலிலுள்ள செல்களை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இவற்றின் கண்பார்வையும் கூர்மையானவை. எனவே தான் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நிறங்களை மாற்றிக்கொள்கிறது. இதில் ஸ்குவிட் என்ற உயிரினம் பயந்துபோனால், அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன் நிறம் மாறிவிடும். இதில் சில உயிரனங்கள் பயோலூமினன்ஸ் எனும் ஒளியை ஏற்படுத்துகின்றன. இது அதன் உடலில் உள்ள ஒளியை ஏற்படுத்தும் உறுப்பிலுள்ள பாக்டீரியாவினாலும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

What do Giant Squid eat? - Quora

சில மீன்கள் நன்னீரிலும் சில மீன்கள் உப்பு நீரிலும் வாழ்வது ஏன்?

இதெல்லாம் எப்படியாவது வாழவேண்டும் என்ற நெருக்கடியில் ஏற்படுபவதுதான். இயற்கையில் பரிணாம வளர்ச்சிகாரணமாக இப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படுகின்றன. நன்னீரில் வாழும் மீன்கள், உப்பில்லாத காரணத்தால் அதற்கேற்றபடி தங்களது உடலின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன. உப்புநீரில் வாழும் மீன்கள், தங்கள் உடலில் உள்ளே வரும் உப்பை கழிவாக வெளியேற்றிவிடுகின்றன. தங்களின் உடல் இயங்கத் தேவையான அளவுக்கு உப்பை மட்டுமே அவை எடுத்துக்கொள்கின்றன.  இவை எல்லாம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விஷயங்கள். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?