சிறந்த முறையில் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு- இந்தியா டுடே ஆய்வு!

 















தொழில்துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே, அனைத்து இந்திய மாநிலங்களையும் முந்தி ஆல்ரவுண்டர் மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது. 

உள்மாநில உற்பத்தி மதிப்பு 21.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை இன்னும் மேம்படுத்தி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார். 

மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பொருளாதார கௌன்சில் ஒன்றை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். அதில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். 28,508  கோடி ரூபாய்க்கான 49 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு 83 ஆயிரம் பேருக்கு கிடைக்கும். 

மாநில அரசு விவசாயத்திற்கு உதவும் வகையில், தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை மெல்ல மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலைமை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கூறப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியை குறை சொல்லி பேசினாலும் இப்போதைய ஆட்சி கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நிதி ஆதாரங்களை திரட்டவேண்டியதிருக்கும்.  20.7 மில்லியன் குடும்பங்களின் தலையில்  2.6 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருக்கிறார். சமூகநீதி மாதிரியில் நாங்கள் மக்களுக்கான பொருளாதார வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் பெறுவோம் என்று முதல்வர் பேசியிருக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக அநீதிக்கு துணை போகாமல் நின்றால் சமூக நீதி வெல்வதோடு, மக்களும்  உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. 

இந்தியா டுடே கட்டுரையைத் தழுவியது. 

மூலக்கட்டுரை அமர்நாத் மேனன்





கருத்துகள்