ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

 










விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.

 சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது. 




நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நிலத்தை சுத்தம் செய்ததுதான் இவரின் முதல்பணி. 

சுத்தம் செய்த நிலத்தில் அத்தி, வில்வம், ஏழிலை பாலை , தேவதாரு,யூகலிப்டஸ் ஆகிய மரக்கன்றுகளை ஊன்றியுள்ளார். இது தவிர எண்பது வேப்பிலை மரக்கன்றுகளை விதைத்துள்ளார். அனைத்து மரங்களுமே ஆக்சிஜனை வெளித்தள்ளும் தொழிற்சாலைதான் என  கூறுகிறார்கள்.  சுப்புராஜின் நண்பர்கள் அனைவருமே கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் எனவே, அவரின் செயல்பாடுகளுக்கு துணையாக நிற்கிறார்கள். கிருஷ்ணன்கோவில் முதல் பிள்ளவாக்கால் அணை வரையில் ஒரு லட்சம் பனை விதைகளை ஊன்ற திட்டமிட்டுள்ளனர். எட்டாயிரம் விதைகளை சென்ற ஆண்டே விதைத்துள்ளனர். அக்டோபரில் மழை தொடங்கும்போது விதைத்தால்  அடுத்த ஜூன்மாதத்தில் பனை மரக்கன்றின் இலை தெரியும். 

குழந்தைகளை கூட்டி வந்து இந்த திட்டத்தை பற்றி சொல்லவேண்டும் என நினைத்துள்ளேன். இதன்மூலம் அவர்கள் அரிய தாவரங்கள், உயிரினங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

அஸீபா பாத்திமா


https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/nov/14/virudhunagars-own-oxygen-factory-2383367.html











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்