அம்மா உணவகம் செயல்படுமா? மூடப்படுமா? - நெருக்கும் பிரச்னைகள்
மொத்த அம்மா உணவகங்கள்
403
தினசரி ஏற்படும் நஷ்டம்
10--1000
மாதம்
1.2 லட்சம்
மொத்த ஊழியர்கள் 4,500
ஒரு உணவகத்தில்...
12-25 பேர்
ஆண்டு வருமானம்
15.5 கோடி
ஆண்டு செலவு
102 கோடி
மாநில அரசின் பொதுவிநியோகத்துறை உணவகத்திற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது.
புதிய விதிகள்
மாதம் கட்டாயம் ஐந்து நாட்கள் விடுப்பு எடுக்கவேண்டும்.
இதன்மூலம் மாநகராட்சி மாதம் ஒரு கோடி ரூபாய் சேமிக்கலாம்.
பொருட்கள் உள்ளிருப்பு, வாங்குவது என அனைத்தையும் ஊழல் இன்றி பராமரிக்க ஏராளமான பதிவேடுகள் நடைமுறையில் உள்ளன.
தவறுகள் கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் அம்மா உணவகம் இயக்கப்பட்டது. அப்போது உணவகத்திற்கு 120 முதல் 500 பேர் வந்தனர். ஆனால் இப்போது 20 முதல் 50 பேர் வந்தாலே பெரிய விஷயம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவகத்தில் அதிக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கு என்றால் இருபது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஊழியர் என்பதுதான். ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊழியர்கள் ஒருவருக்கு சம்பளம் ரூ.300 என வழங்குகிறார்கள்.
சைதாப்பேட்டை, ராயப்பேட்டையில் நிறைய வாடிக்கையாளர்கள் வந்துகொண்டிருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கையும் குறைந்துவருகிறது பிராட்வேயில் உள்ள அம்மா உணவகம் வாடிக்கையாளர்களே இல்லாமல் காற்று வாங்குகிறது என்கிறார்கள். ஊழியர்கள் குறைப்பு நடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போதுதான் அம்மா உணவகம் நடப்பதை சாத்தியப்படுத்த முடியும்.
கோமல் கௌதம்
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக