டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்
புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ் |
பெர்சி ஃபெர்னாண்டஸ்
கானுயிர் புகைப்படக் கலைஞர்
புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ் |
கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது?
தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.
ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.
பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப் பார்ப்பது பிடித்தமானதாக இருந்தது. மயில்கள் ஆடுவதை குதுப்மினார் பின்னணியில் பார்ப்பது அழகாக இருந்தது. கார்பெட், ரந்தம்பூர், கன்கா, பண்டவ்கார், நாகர்கோல், பண்டிபூர் ஆகிய இடங்களிலுள்ள தேசியப் பூங்காக்களுக்கு சென்று வந்தேன். இங்கு புலிகளை பாதுகாத்து வந்தனர் என்பதால் அவற்றைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இமாலய மலைக்கும் கூட சென்று வந்துள்ளேன். இந்தியாவில் உள்ள கானுயிர்களை முழுமையாக பார்க்க நமது ஆயுள் போதாது என்றே நினைக்கிறேன்.
புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ் |
நான் இப்போது துபாயில் உள்ளேன். இங்கிருந்து கென்யாவின் தேசிய பூங்காக்களுக்கு செல்வது அதிக தூரம் இல்லை. மாரா, அம்போசெலி, ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளேன். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கெம்செட்காவில் சால்மன் மீன்களை வேட்டையாடும் பழுப்பு நிற கரடிகள் அதிகம். பசிபிக்கில் உள்ள சாலமன் மீன்களின் இருபது சதவீதம் கெம்செட்காவிற்கு வருகிறது. குரோனோட்ஸ்கி பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள குரிலே ஏரி முக்கியமானது. இங்கு பழுப்பு நிற கரடிகளைப் பார்க்கலாம்.
நான் இப்போதுதான் பிரேசிலின் பான்டனாலிருந்து வருகிறேன். இங்குதான் காட்டுத்தீயால் அதிக விலங்குகள் இறந்துபோயின என்ற செய்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
பெர்சி ஃபெர்னாண்டஸ் |
டேவின் அட்டன்பரோ உங்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தி முன்மாதிரியா?
அட்டன்பரோ தனது வாழ்நாள் முழுக்க கானுயிர் பாதுகாப்பிற்காக செயல்பட்டுள்ளார். அது என்னைப் போல பலருக்கும் ஊக்கமூட்டியுள்ளது. நமது உலகம் அழகானது என்பதை அவரது செயல்பாடுகளால்தான் அறிந்தோம். நமது வாழ்க்கை முறை எப்படி உலகை பாதிக்கிறது என்பதை முதலில் வெளிப்படையாக கூறியவர் அவர்தான். வைல்ட் கர்நாடகா என்ற ஆவணப்படம் டேவிட் அட்டன்பரோ உருவாக்கிய முக்கியமான ஆவணப்படமாகும்.
Frontline
leena mariam koshy
கருத்துகள்
கருத்துரையிடுக