குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

 









பிரதாப் ஆதித்ய பால்





பிரதாப் ஆதித்ய பால்

கல்வியாளர்

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான். 

2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது. 

கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது?

இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்பதால், அதன் கூடவே ஏராளமான பிரச்னைகளும் உள்ளன. 

இந்திய சிற்பங்களை வெளிநாடுகளில் விற்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக்கேள்விக்கு சரியான பதிலை சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. இன்று பல்வேறு நாடுகளில் கலாசாரம், வரலாறு சார்ந்த சிற்பங்களை திரும்ப பெற்று வருகிறார்கள். தொன்மை இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் பற்றிய நமது மனநிலை மாறி வருகிறது. அதேசமயம் இந்தியாவின் சிற்பங்கள், ஓவியங்களை வெளிநாடுகளில் விற்பதும் அதிகரித்து வருகிறது. ரூபாயும், டாலரும் மதிப்பு ரீதியாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. தொன்மை பொருட்களுக்காக சந்தை இப்போது இல்லை என்று நிறைய பேர் சொல்லி வருகிறார்கள். 



நீங்கள் திபெத், நேபாளிய கலை, ஓவியங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். அவை எப்படி இந்தியர்களின் தொன்மை ஓவியங்களோடு ஒன்றாகின்றன? 

நான் எழுதிய நூலில் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். 1956ஆம் ஆண்டு நான் நேபாளத்துக்கு சென்றேன். அங்கு விபத்தாக பார்த்த கலைகளில் இந்திய கலாசாரத்தைக் கண்டேன். இந்து மற்றும் புத்த கலாசாரங்கள் ஒன்றையொன்று தொட்டுள்ளன என்று ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தூதர் கூறியுள்ளார். இதை அறிந்தபோது எனக்கு வயது 21 ஆக இருந்தது. பட்டம் பெற்றிருந்தேன் என்றாலும் கூட பௌத்தம், சமணம் பற்றி ஏதும் தெரியவில்லை. நேபாளத்தின் நகரில் இந்துமதம், பௌத்தம் எந்த வேறுபாடும் இல்லாமல் அமைதியாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. திபெத் மன்னர்கள், இந்தியாவின் கலாசாரம், கலை பற்றிய ஏராளமான நூல்களை பத்திரமாக சேகரித்து வைத்துள்ளனர். அவர்களின் அப்பணிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்தளவு சிறப்பாக பணியாற்றியுள்ளனர். 

நீங்கள் இப்போது எதற்கு சுயசரிதை ஒன்றை எழுதுகிறீர்கள்?

இது என்னுடைய குருதட்சிணையாக நினைக்கிறேன். குமாரசுவாமி 1947ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் காலமானார். அவர் மூலம்தான் நான் உருவானேன். ஆகஸ்ட் 15 தேதியை போஸ்டனில் உள்ள இந்தியர்களின் குழுக்களிடையே கொண்டாடினேன். இத்தனை ஆண்டுகள் கழித்து வேறுபட்ட இந்தியாவைப் பார்க்கிறேன். தாகூரின் ஜனகனமண இந்தியாவின் தேசியகீதமாக இருப்பது மகிழ்ச்சி. ஆனால் பன்மைத்துவத் தன்மை இந்த நூற்றாண்டில் அழித்து வருகிறோம். 



தாகூர் தனது படைப்புகளின் வழியே மூர்க்கமான தேசியவாத அணுகுமுறையை எதிர்த்து வந்தார். வரலாற்றை அணுகும்போது இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டுமா?

தாகூர் தனது கல்வி அமைப்பிற்கே விஸ்வ பாரதி என்றுதான் பெயர் வைத்தார். எனவே கோவிட் பாதிப்பிற்கும் பிறகு நாம் தேசியவாதம் சார்ந்து அனைத்தையும் பார்க்க வேண்டியதில்லை. குறுகிய தேசியவாத த்திற்குள் நாம் அனைத்து விஷயங்களையும் அடைத்து பார்க்க வேண்டியதில்லை. 



கருத்துகள்