உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

 
Indian Women's Cricket: Is Mithali Raj 'slow' in ODIs? | Indian Women's  Cricket: Is Mithali Raj 'slow' in ODIs?
மிதாலி ராஜ் 

மிதாலி ராஜ்

கிரிக்கெட் வீரர்


அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம். 

இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்?

இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன். 

கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா? 

உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்றிக்கு அருகில் இருமுறை சென்றுள்ளோம். நாங்கள் அணியாக வெற்றிக்கோப்பையை ஏந்தியிருக்க நினைக்கிறேன். 

கேல் ரத்னா எப்படிப்பட்ட விருது என நினைக்கிறீர்கள்?

இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு விளையாடியதற்கான பரிசு என நினைக்கிறேன். இது எனக்கான விருது மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட்டிற்கு கிடைத்தத்து என நினைக்கிறேன். பெற்றோர், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி வழிகாட்டுநர்கள், நண்பர்கள் ஆகியோரும் எனது வெற்றியில் பங்கு பெற்றவர்கள்தான். இன்னும் பெண்கள் கிரிக்கெட்ட உயிர்ப்பாக வைத்து இருக்க பாடுபட்ட மூத்த வீரர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன். 

ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு வருகிறது. நீங்கள் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்கள். ஆனால் அதனை விளையாட விரும்புகிறீர்களா?

நான் இப்போது அதைப்பற்றி ஏதும் நினைக்கவில்லை. இப்போது என்னுடைய கவனம் உலகப்கோப்பை பற்றி மட்டுமே இருக்கிறது. என்னுடைய எண்ணம் முழுவதும் உலகப்கோப்பை அதற்கான அணி பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

 இந்தியா டுடே 

சுகானி சிங்கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?