காஷ்மீரில் உருவாகும் தொழில்முனைவோர்கள்!- சுயதொழிலில் ஆர்வம் காட்டும் பெண்கள்!
பெண் தொழில்முனைவோர் |
காஷ்மீரில் தொழிலை நடத்துவது கடினமானது. தீவிரவாதிகள் தொல்லை, அரசின் இணையத்தடை ஆகியவை அங்கு தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களைக் கூட எண்ணத்தை மாற்றும்படி செய்திருக்கிறது. இதில் தப்பி பிழைத்து விடாமுயற்சிய செய்தவர்கள் மட்டுமே இப்போது காஷ்மீரில் வெற்றி பெற்றுள்ளனர்.
சாடியா முஃப்டி அப்படிப்பட்டவர்தான். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவருக்கு ஸ்ரீநகரில் இரண்டு டிசைனர் பொட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு அவர் மிகவும் போராடியிருக்கிறார். இதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஜெகாங்கீர் சௌக், ஹஸ்ராத்பால் எனும் இரு இடங்களில் ஹேங்கர்ஸ் தி குளோஸெட் என்ற பெயரில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
முஃப்டி தான் வெற்றி பெற்றதே போதும் என்று இருக்காமல், ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பெண்கள் இத்தொழிலை செய்வதற்கு தயாராகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் அரசு வேலைக்கு போகாதநிலையில் ஆடை வடிவமைப்பு தொழில் அவர்களை ஈர்த்து வருகிறது.
கொரோனா கால பொதுமுடக்கம், வேலைவாய்ப்பின்மை, இணைய முடக்கம், அரசியல் பிரச்னைகள் என அங்குள்ள தொழில்முனைவோர்களை பாதிக்க இரண்டு டஜன் பிரச்னைகள் உள்ளன. உணவு, உடை, கிரிக்கெட், விவசாயம் என கிடைக்கும் அனைத்து துறைகளிலும் தொழில்முனைவோர் முயன்று வருகிறார்கள்.
ஹாயா வக்கீல் என்பவர் ரேடியோ ஜாக்கியாக பத்தாண்டுகளாக வேலை செய்துவருகிறார். தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து கஃபே ஒன்றை திறந்து நடத்தி வருகிறார். 2016ஆம் ஆண்டு நினைத்த கனவை ஆறுமாதங்கள் பணியாற்றி நிஜமாக்கியிருக்கிறார். இப்போது கஃபே வில் நாற்பது பணியாட்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் பெண்களால் நடத்தப்படும் சிறுதொழில்களின் எண்ணிக்கை 3,933 ஆக உள்ளது. 2019-20படி அரசு அமைப்புகளில் வேலைக்கு சேரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இணையத்தின் வழியே சமூக வலைத்தளங்களின் மூலமே பொருட்களை பெண்கள் விற்று வருகின்றனர்.
பிர்தௌஸ் ஹாசன்
கருத்துகள்
கருத்துரையிடுக