சமூகத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம்! - லாரா தத்தா, இந்தி நடிகை
லாரா தத்தா |
ஹைகப்ஸ் அண்ட் ஹூக்கப்ஸ் என்ற வெப் தொடரில் லாரா த த்தா நடிக்கிறார். டிரெய்லரைப் பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். கணவரைப் பிரிந்து வாழும் நாற்பது வயதுப்பெண் வசு. இவருக்கு மகள் டீனேஜில் இருக்கிறார். இந்த நேரத்தில் வசு தனக்கான இணையைத் தேடுகிறார். இதனை அவரது மகள் எப்படிபுரிந்துகொள்கிறார் என்பதுதான் கதை. இயக்குநர் குணால் கோலி.
உங்கள் தொடர் பற்றி பேசுங்கள்?
இதுபோல முக்கியமான யாரும் பேசத்தயங்கும் விஷயங்கள் தொடராக வருவது அரிதானது. அம்மாவும் மகளும் டேட்டிங் ஆப் மூலம் தங்களுக்கான இணையைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இருவரின் உணர்வுகளும் எப்படி உள்ளன, அதனை இருவரும் புரிந்துகொண்டார்களா என்பதுதான் கதை.
இதுபோல ஆப் மூலம் பெண்கள் தவறான ஆண்களிடம் சிக்கிக்கொள்வது நிறைய நடக்கிறதே?
நாற்பது வயதான பெண்ணுக்கு இந்த விஷயத்தில் நடைமுறை தெரியும். அவர் ஒன்றும் டீனேஜில் இருப்பவர் அல்ல. நீங்கள் கூறுவது உண்மைதான். நாற்பது வயதுக்கு பிறகு வாழ்க்கையை நாமே வழிநடத்திக்கொள்ள முடியும். இப்படி டேட்டிங் ஆப்பில் கிடைக்கும் உறவுகள் சிலசமயம் சரியாக இருக்கும். சில சமயங்களில் மோசமாகவும் அமையும். இப்படி கிடைக்கும் உறவுகள் வலுவாகவும் அமையலாம். அல்லது ஓரிரவுக்கானதாகவும் கூட மாறலாம்.
ஆண்களும் நாற்பது வயதுக்கு பிறகு உறவுகளில் குறும்புக்காரர்களாக மாறுகிறார்களா?
தனியாக தங்களது பிள்ளைகளுடன் வாழும் அம்மாக்களைப் பற்றி சமூகத்தில் யாரும் பேசுவதில்லை. மணவாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிட்ட பெண்கள் திரும்பவும் மணவாழ்க்கைக்குள் செல்ல சமூகம் அறிவுறுத்துவதில்லை. இதைப்பற்றி விவாதம் அல்ல, யோசிக்க கூட கூடாதென நினைக்கிறது. உடலுறவு மீதான ஆர்வம் இருந்தால் கூட அதனை பெண் தனது மனதிற்குள் புதைத்து வைத்துக்கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்படுகிறாள். இதற்கு காரணமாக பிள்ளைகளை கைகாட்டுகிறார்கள். இது வருத்தமான நிலை. நாற்பது வயது எட்டிய பெண்களுக்கு இப்படித்தான் சோகமான நிலை ஏற்படுகிறது.
பொருத்தமில்லாத தம்பதிகள் பிரிந்துவிடலாம் என்கிறீர்களா?
பெண், திருமண உறவிலிருந்து விலகிப்போவது இன்றும் கடினமான முடிவாக பார்க்கிறார்கள். அவள் கணவரை பொருளாதாரத்திற்காக சார்ந்து இருந்தால் பிரியும் முடிவு கடினமானது. கூடவே குழந்தைகளை அவள் பார்க்கவேண்டிய நிலை உள்ளது. ஆண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருந்தால் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு உறவைத் தேடிக்கொள்ள முடிகிறது. பெண்ணுக்கு இது கடினமானது. சமூகம், பெண்ணிடம்தான் வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் நீ பொறுத்துப்போகவேண்டும் என அறிவுறுத்துகிறது.
சினிமாவின் இடத்தை வேறு யாரும் பிடிக்க முடியாது என நினைக்கிறீர்களா?
லிபிகா வர்மா
டெக்கன் கிரானிக்கல்
கருத்துகள்
கருத்துரையிடுக