எழுதுவதில் சுணக்கம்! - கடிதங்கள்

 
எழுதுவதில் சுணக்கம்
அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா?

இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அறையில் பயங்கரமான புழுக்கம். அலுவலகம் சென்றால் கூட எட்டு மணிநேரம் சமாளித்து விடலாம். வடக்குப்புதுப்பாளையம் நூலகத்திற்கு அன்பளிப்பாக தர எட்டு நூல்களை ரெடி செய்துள்ளேன். 

மந்திர சந்திப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலை படித்து வருகிறேன். இந்த நூல் தினசரி ஒரு அத்தியாயம் என அவரது பேஸ்புக் பக்கத்திலும், வலைத்தளத்திலும் வெளியானது. இப்போது நேரம் கிடைத்துள்ளதால் அதனை நூலாக தொகுத்துவிட்டார். 

அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை கணியம் சீனிவாசன் சாரிடமிருந்து பெற்றேன். அதனை இனிமேல்தான் படிக்கத் தொடங்கவேண்டும். அடுத்து வரும் ஜூனில்தான் எங்களுக்கு வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். எனக்கென தனியாக எழுதும் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியவில்லை. எழுதுவதில் சுணக்கமாக சோம்பலாக இருக்கிறது. வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும். வாசிப்பதிலும் வேகம் கூட்டவேண்டும். 

நன்றி

ச.அன்பரசு

5.4. 2021


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?