இலைகளிலுள்ள பச்சை நிறம் என்பது இயல்பானதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 
How Often Do You Water Succulents? | HGTV
பதில் சொல்லுங்க ப்ரோ?

இலைகளின் பச்சை நிறம் என்பது இயல்பானதா?

நிலப்பரப்பு சார்ந்து நமது நிறத்திற்கும், மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பு போலத்தான் இலைகளின் நிறமும் அமைகிறது. அனைத்து மரங்களின் இலைகளிலும் குளோரோபில் உள்ளது. இந்த நிறமிதான்  ஒளியை இலைகளுக்கு ஈர்த்து தருகிறது. கூடவே உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் மூலம் ஒளியாற்றலை தனக்கான போஷாக்கான சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உள்ள வேறு நிறமிகள் குளோரோபில் அளவுக்கு திறன் கொண்டவையாக இல்லை. அவை ஆற்றலை குளோரோபில்லுக்குத்தான் அனுப்புகின்றன. மஞ்சள், ஆரஞ்சு என்றுள்ள இந்த நிறங்களை கரோட்டினாய்டு என்று அழைக்கின்றனர். இவை பீட்டா கரோட்டின் வகையைச் சேரந்தவை. பீட்டா  கரோட்டின் என்பதுதான் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது. 

பனிக்காலத்தில் இலைகள் முற்றி வயதானவையாக மாறும். இலைகளில் இப்போது குளோரோபில் இருக்காது. பிற நிறங்களும் காணாமல் போய் மெல்ல பழுப்பு நிறத்திற்கு மாறி உடையும் தன்மையை அடையும். இலைகளில் உள்ள பச்சை நிறத்தை எடுக்கும் முறையை குரோமோட்டோகிராபி என்று அழைக்கின்றனர். 

நனைந்த காகிதத்தில் நீரில் கரையும் இங்கினால் எழுதியிருந்தால் அந்த எழுத்துகள் எப்படி மாறும் என்பதை பார்த்திருப்பீர்கள். அதுதான் குரோமோட்டோகிராபியின் செயல்முறை. பொதுவாக இலையிலிருந்து நிறங்களை பிரித்தெடுப்பது கடினமானதுதான். இதனை வெள்ளை ஃபில்டர் காகிதம் கொண்டு செய்யலாம். இலையை தாளில் அழுத்தி வைத்து நிறத்தை எடுக்கலாம். பிறகு ஆல்கஹாலில் அதனை நனைத்தால் குளோரோபில்லில் உள்ள மீதி நிறங்களை எளிதாக பார்க்கலாம். இலைகளில் உள்ள சிவப்பு, கத்தரிப்பூநிறம் போன்றவை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுபவை அல்ல. ஆனால் அவை இலையின் மீது அதிகளவு சூரிய ஒளி படுவதை தடுக்கின்றன. இலையை வேக வைத்தால், அரைத்தால் அதிலுள்ள சிவப்பு நிறத்தை நாம் பெறலாம். 

பூச்சிகளை தின்னும் தாவரங்கள் அவற்றை எப்படி செரிக்கின்றன?

வீனஸ் ஃபிளைட்ராப் என்ற செடியை இதற்கு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். இந்த தாவரம் பூச்சிகளை உண்டு செரிப்பது விலங்குகள் பிற விலங்குகளை கொன்று செரிமானம் செய்வதுஃ வேறுபடுகிறது. இது தாவரம் என்பதால் ஒளிச்சேர்க்கை செய்து தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்கிறது. ஆனால், இவற்றுக்கு நைட்ரஜன்,பாஸ்பரஸ் தேவைப்படும்போது அதற்கு பூச்சிகளைக் கொன்று செரிமானம் செய்வது உதவுகிறது. அதிலுள்ள சத்துகளை உறிஞ்சிக்கொண்டே தன்னை வலுவாக்கிக்கொள்கிறது. 

பூச்சி தின்னும் செடியில் உள்ள தேன், பூச்சிகளை கவரும் அளவுக்கு நறுமணம் கொண்டது. அதில் ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் உள்ளே வந்தவுடன் இலைகளுக்கு மேல் உள்ள சிறு நூல் இழைகள் போன்ற  அமைப்பு அதனை வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறது. பிறகு தாவரத்திலுள்ள அமிலங்கள் பூச்சியை மூழ்கடித்து கொள்கிறது. காற்று வராதபடி இலை மூடிவிட்டலாம் பூச்சி ஏறத்தாழ மயங்கிய நிலையில் இருக்கும். அமிலத்தின் சிறப்பு, பூச்சியின் உடலிலுள்ள நுண்ணுயிரிகளை அழித்துவிடும் என்பதே. இப்படி ஐந்தாறு பூச்சிகளை பிடித்தபிறகு தாவரம் வேறு பூச்சிகளை வேட்டையாடாது. அமைதியாக ஒளிச்சேர்க்கை செய்யும். செரிமானம்  முழுமையாக முடிய ஒருவாரம் அல்லது பனிரெண்டு நாட்கள் ஆகும். அதற்கு பிறகு இலைகள் திறக்கப்பட்டு பூச்சிகளின் உடல் பாகங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படும். 

வேரிலிருந்து நீர் எப்படி மரத்தின் உச்சியிலுள்ள கிளைகளுக்கு செல்கிறது?

வேரிலுள்ள நீர், மரத்திலுள்ள செல்களின் வழியாக கடத்தப்படுகிறது. இப்படி கடத்தப்பட்ட நீரே உயரத்தில் உள்ள கிளைகளுக்கு செல்கிறது. இது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால், மரத்தை வெட்டினால் அதிலுள்ள நீரை பார்க்க முடியுமா என்று கேட்க கூடாது. அதேசமயம் மரத்தின் செல்கள் இறந்துவிட்டால், வேரிலுள்ள நீர் ஒட்டுமொத்த அழுத்தம் காரணமாகவே நீரை மேலேற்ற முடியும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?