புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

 WaterBear Network Launch Video - YouTube


பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார். 

கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான். 

அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன. 

மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது. 

ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்கள். இறுதியில் பேசும் பெண்மணி, எளிமையாக நாம் புலியைக் காப்பாற்றவில்லை புலிகள்தான் காடுகளை நமக்காக காப்பாற்றி வைத்திருக்கின்றன. அவையும் அழிந்துவிட்டால் நமது உலகம் நமக்கானதாக இருக்காது என்று எச்சரிக்கிறார். 

படம் முடிந்தாலும் புலிகளின் முகமும், கர்ஜனையும் நினைவுகளிலேயே தொடரும்படி படமாக்கியிருக்கிறார்கள். ஆவணப்படத்தைப் பார்க்க.....

https://www.waterbear.com/watch/episode/6037efaa08f86fced46540c6?utm_source=SAPHybris&utm_medium=email&utm_campaign=187&utm_term=Week%2047%20content%20drop%20-%20Monday___Not%20A%20Pet&utm_content=EN

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?