இடுகைகள்

காப்பீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோற்றுப்போவதற்கு செத்துவிடலாம் என நினைத்து போராடும் வக்கீலின் சதுரங்க ஆட்டம் - முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் - அபினவ் சுந்தர்

படம்
  முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாளம் வினித் சீனிவாசன் இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக்  சுகபோகங்களில் ஆசை கொண்ட வக்கீலின் அனைத்துக்கும் ஆசைப்படும் வாழ்க்கைக் கதை. முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நினைத்தது போல வாழ்க்கையில் பிரேக் கிடைக்கவில்லை. பணம், புகழ் என ஏதும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சுய முன்னேற்ற நூல்களில் உள்ள அனைத்தையும் மாற்றுக்கருத்து   இல்லாமல் பின்பற்றுகிறவன்தான் முகுந்தன் உண்ணி. இப்படி இருப்பவனின் வாழ்க்கை ஒருநாள் மாறுகிறது. அவனது அம்மா, வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்றால் திகைப்புக்கு உள்ளாகி கீழே விழுகிறாள். இதனால், கால் எலும்பு விரிசல் காண்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறான். ஆனால், கையில் பணம் இல்லை. அப்போது அவன் வேலை செய்த வக்கீலின் நிறுவனத்திலிருந்தும் கூட   வெளியேறிவிட்டிருக்கிற சூழல். கட்டணத்தை குறைக்க, மருத்துவமனையின் பில்லிங்கில் உள்ள பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் எதிரில் உள்ள கவுண்டரில் பணத்தை ஒருவர் கற்றை கற்றையாக அள்ளி எடுத்து கட்டுகிறார். அதைப் பார்த்து அதன் பின்னால் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறான். அதே

காப்பீடு பணத்திற்காக கொலை செய்யும் ஜெகஜ்ஜால குற்றவாளி! - குருப்பு - ஸ்ரீநாத் ராஜேந்திரன்

படம்
  குருப்பு மலையாளம் துல்கர் சல்மான் பணத்திற்காக ஆசைப்படும் ஒருவனின் குற்றத்தடங்களைப் பற்றிய விவரிப்புதான் மையக்கதை.  கேரளத்தில் நடைபெற்ற முக்கியமான கொலைக்குற்றத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நடந்த சம்பவத்திற்கு வருத்தப்படவேண்டுமா என்பதை தொடர்புடையவர்கள்தான் சொல்லவேண்டும். படத்தில் நாயகன் தனது திறமையைப் பயன்படுத்தி குற்றங்களின் உச்சிக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருக்க படம் நிறைவடைகிறது.  கோபாலகிருஷ்ணன் என்பவரைப் பற்றி அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் படம் கேரளத்தில் தொடங்குகிறது. அப்படியே கோபாலகிருஷ்ணன் பற்றி நோக்கி நகர்கிறது. பிறரை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டி வைப்பதில் ஆர்வம் கொண்டவன், விமானப் படைப் பிரிவில் பயிற்சிக்கு செல்கிறான். ஆனால் அவனது பணம் சம்பாதிக்கும் வேகத்திற்கு விமானப்படை பயிற்சியும் வேலையும் கசப்பாக இருக்கிறது. அங்குதான் பீட்டர் என்ற நண்பன் கிடைக்கிறான். அவனுக்கும் வெளியில் உள்ள அழகைக் காட்டுகிறான். ஆனால் தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை மறந்தும் கூட சொல்வதில்லை.  கோபாலகிருஷ்ணன் யார் என அவனது நண்பர்கள், மனைவி, சுற்றம் என பலரும் பல்வேறு கருத்துகள

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந

இந்தியா தனது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைகளை உணரவேண்டும்! - வெரோனிகா ஸ்காட்

படம்
            வெரோனிகா ஸ்காட் ஸ்விஸ் ரே குழுமம் ஸ்விஸ் ரே குழுமம் , உலக நாடுகளில் காப்பீடு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது . இந்தியா பல்வேறு பேரிடர்களை இப்போது சந்தித்து வருகிறது . எப்படி காப்பீட்டுத்துறை இதற்கு உதவி செய்யும் ? நடக்கும் பேரிடர்களில் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை . உலகம் முழுக்கவே இதன் பாதிப்புகள் உள்ளன . பல நாடுகள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மைதான் . முதலில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் உணரவேண்டும் . பாதிப்பை பல்வேறு கலாசாரங்களும் ஏற்றுக்கொள்வது கடினமாகவே இருக்கும் . கிடைக்கும் செய்தியும் கூட நேர்மறையாக இருக்காது . எனவே அதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசும் தனியாரும் இயங்குவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு , நாடு முழுக்க பேரிடர் பணிகளை செய்கிறது . இதில் மாநில , மாவட்ட , உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முக்கியமான பங்கு உள்ளது . நிதி அமைச்சகம் , உள்ளூர் அளவில் நிதியை வழங்கவேண்டும் என்று கூறியது முக்கியமானது . உலகில் அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளிலும் கூட இதேபோன்ற அமைப்புமுறைகள்தான் செயல்பாட்டில்