இடுகைகள்

அறிவியல்- குடிநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை!

படம்
குடிநீர் போர் ! 2020 ஆம் ஆண்டில் 21  இந்திய நகரங்களில் நீர்தட்டுப்பாடு ஏற்பட உள்ளதை நிதிஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது . உலகெங்கும் சுகாதாரமான குடிநீர் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என காம்போசிட் வாட்டர் மேனேஜ்மென்ட் இன்டெக்ஸ் (CWMI) அறிக்கை ( ஜூன் 14,2018) தகவல் கூறுகிறது . டெல்லி , பெங்களூரு , சென்னை , ஹைதராபாத் ஆகிய நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நீர்பற்றாக்குறையால் தீவிரமாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது . இதன்விளைவாக 2030 ஆம் ஆண்டில் 40% பேருக்கு நீர் என்பதே கானல்நீராகிவிடும் அபாயம் உள்ளது . தற்போதே ஆந்திரா , சத்தீஸ்கர் , தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது . 10-25 மி . மீ மழைநீர் 2002-2016 காலகட்டத்தில் குறைந்துள்ளது இதற்கு முக்கியக்காரணம் . நீர்தட்டுப்பாட்டால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6%(2050) பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது நிதி ஆயோக் அறிக்கை . குடிநீர் 70% கலப்படமடைந்து நீர்தர அட்டவணையில் 122 நாடுகளின் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம் 120.  உலகிலுள்ள நன்னீரில் அளவில் இந்தியாவிலுள்ளது 4% மட்டுமே . இதைக்கொண்

குடிநீரில் கலக்கும் கதிரியக்க யுரேனியம்!

படம்
யுரேனியம் கலப்படம் ! இந்தியாவிலுள்ள பதினாறு மாநிலங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் உள்ளதாக அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . குடிநீரில் யுரேனியத்தின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவைவிட அதிகம் என்பது நம் கவலைப்படவேண்டிய விஷயம் . ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள 324 கிணறுகள் மற்றும் பதினாறு மாநிலங்களிலுள்ள குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரித்துள்ளது . 30 மைக்ரோகிராம் என்பதே உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சூழல் அமைப்பு ஆகியவை அங்கீகரித்த யுரேனியத்தின் அளவு . நீரில் கலப்படமாகும் பொருட்களின் பட்டியலில் இந்தியா யுரேனியத்தை இன்னும் சேர்க்கவேயில்லை . மனிதர்கள் நைட்ரேட் பயன்பாட்டினால் பூமியின் பாறைகளிலுள்ள யுரேனியம் மெல்ல நீரில் கரைந்து அதனை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது . மூளை , இதயம் , சிறுநீரகம் , தைராய்டு ஆகிய பகுதிகளை பாதிக்கும் யுரேனியம் , ஈறுகளில் ரத்தம் வடிதல் , சிறுநீரக நோய்கள் , மலட்டுத்தன்மை , ஆஸ்டியோபோரோசிஸ் , நோய்எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது .