இடுகைகள்

தசரதன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி

படம்
  எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அமிஷ் திரிபாதி எழுத்தாளர்  லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.  வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா? எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.  டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே? ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலுள்ள இந்தியர்களுக்கு

சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

படம்
  எழுத்தாளர் அமிஷ் இஷ்வாகு குலத்தோன்றல் அமிஷ் தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன்  வெஸ்லேண்ட் ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம்.  கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார்.  கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது.  தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டு