இடுகைகள்

நேர்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒழுக்கம் நாணயம் உண்மை ஆகியவற்றை ஆராய்ச்சிப் படிப்பிலும் காதல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் இளைஞனின் போராட்டம்!

படம்
      மிஸ்டர் கிங் சரண்குமார் (சிவா), யாஷ்விகாநிஷ்கலா (உமா தேவி), ஊர்வி சிங்(வெண்ணிலா),முரளி சர்மா இசை மணி சர்மா இயக்கம் சசிதர் சாவாலி வாழ்க்கையில் நேர்மை முக்கியம். பொய்யான விஷயங்களே பேச மாட்டேன். செய்யவும் மாட்டேன் என அடம்பிடித்து வாழும் பிஹெச்டி மாணவர் சந்திக்கும் காதல், தொழில் பிரச்னைகளைப் பற்றிய படம். படத்தின் நாயகன் சரண், தனது கதையை சுனிலிடம் சொல்வதுபோல கதை தொடங்குகிறது. சிங்கிள் சிவா என்பதுதான் நாயகனின் பெயர். அவர் பகுதி நேரமாக ரேடியோ சிட்டியில் தொகுப்பாளராக வேலை செய்கிறார். மீதி நேரத்தில் முனைவர் படிப்புக்கான புராஜெக்டில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் பெற்றோர் வீட்டை மாற்றுகிறார்கள். அப்போது சிவா, அருகிலுள்ள வீட்டுக்குச் செல்லும்போதுதான் அங்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வந்திருப்பது தெரிகிறது. அங்குதான் நாயகியை(யாஷ்விகா) சந்திக்கிறான். அந்த சந்திப்பு இருவருக்குமே தீப்பொறி போல அமைகிறது. யாஷ்விகா, அப்பாவின் பேச்சுக்கு அடங்கிய பெண். அப்பா முரளி சர்மாவோ, தான் எடுத்த முடிவுதான் இறுதி என மேலாதிக்கம் கொண்டவராக வலம்வருகிறார். அவருக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து ...

தலைவனாக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் உருவாவது அவசியம்!

படம்
            அரசியல் விழிப்புணர்வு தேவை  இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற முடியாது போனதற்கு காரணம் சரியான நபரை முக்கியமான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்க முடியாத நுட்பமில்லாத தன்மையே காரணம். குறிப்பாக அரசியல் தளத்தில். ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? அரசியல்வாதி ஒருவரின் மகனை அடுத்த தலைவர் என்று ஏன் சமாதானம் செய்துகொள்கிறோம்? இதற்கு காரணமாக மூன்று சிக்கல்களைக் கூறலாம். ஒன்று, உணர்ச்சிரீதியாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது. ஒரே மாதிரியான எப்போதும்போலான மன்னிப்புகளைக் கேட்பது. ஆனால் இந்திய மக்கள் பெரிதும் உணர்ச்சிகரமானவர்கள். இதற்கு நமது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த இயல்பே பொதுப்பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, முன்வருகிறது. எனவே, இதன் முடிவுகள் எப்போதும் நியாயமானதாக, பகுத்தறிவுக்குரியதாக இருப்பதில்லை. நாம் பிக் பி யோடு உணர்வுபூர்வமாக இணைந்துள்ளதால், ஜூனியர் பிக்கும் வாய்ப்பினை அளிக்கிறோம். சினிமா என்ற வகையில் இதுபோன்ற முடிவுகள் மக்கள் வாழ்க்கையி்ல பெரிய வித்தியா...

நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

படம்
                நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!  அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.  இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய...

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன...

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் ...

பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது.  டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.  அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் எ...

பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

படம்
  பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம். ‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.   நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது. பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடி...

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், ...

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்தி...

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  ம...

தேசப்பற்று ஓவர்டோஸாக பொங்கினால்... விஜய் ஐபிஎஸ்

படம்
  விஜய் ஐபிஎஸ்  சுமந்த் இயக்குநர் ஹனுமந்த ரெட்டி  குலுக்கிய கோலாவாக தேசப்பற்று பொங்க டிஎஸ்பி செய்யும் சீர்திருத்த செயல்கள் தான் படத்தின் கதை.  படத்தில் தெலுங்கு படத்திற்கான கிளிஷே காட்சிகள் மிகச்சிலவே உண்டு. மற்றபடி நிறைய விஷயங்களை இயக்குநர் சீரியசாகவே சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், காட்சிகளாக அவை ஒருங்கிணைப்பாக புத்திசாலித்தனமாக மாறவில்லை.  மேலேயுள்ள போஸ்டரைப் பார்த்தால் அதில் ஒரு பெண் தலையை ஒருக்களித்து புன்னகைப்பார். இவரைத் தவிர்த்து படத்தில் வரும் அனைவரும் காரண காரியங்களோடு இருக்கிறார்கள். போஸ்டரில் இடம் காலியாக இருக்கும் என்பதால் நாயகியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். படத்தில் இவரால் சல்லி பைசா பிரயோஜனம் கிடையாது.  நேர்மையாக நெருப்புபோல இருக்க நினைக்கும் விஜய் சந்திக்கும் ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளால் நிறைய ஆபத்துகளை சந்திக்கிறார். இதனால் கண்பார்வையை இழக்கிறார். பிறகு, மோசமான குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு பார்வை பெற்று நைச்சியமாக தந்திரமான வழியில் அதிகாரத்தைப் பெற்று அரசியல்வாதிகளை ஏண்டா இவனை உயிரோடு விட்டோம் என்று நினைக்கும்படி யோசிக்க...

தனது வாழ்க்கையை அழித்த தொழிலதிபரை பழிவாங்கும் மருத்துவரின் கதை! - டாக்டர் ப்ரீஸனர் 2019

படம்
  டாக்டர் ப்ரீஸனர் 2019 தென்கொரிய டிவி தொடர் நா யீ ஜே என்ற மருத்துவர், தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எமர்ஜென்சி பிரிவு மருத்துவராக இருந்து காப்பாற்றுகிறார். இதன் விளைவாக, அவரது வேலை பறிபோகிறது. மருத்துவர் உரிமம் தடை செய்யப்பட சிறைக்குச் செல்கிறார்.  அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவரது அம்மா, கைவிடப்பட்ட நிலையில் இறக்கிறார். மருத்துவர் அரசியலால் பாதிக்கப்பட, மெல்ல அவரும் செல்வாக்கான ஆட்களின் உதவியைப் பெற்று தனது வாழ்க்கையை அழித்தவர்களை பழிவாங்கத் தொடங்க ஆட்டம் ஆரம்பம். அதுதான் டிவி தொடரின் பதினாறு எபிசோடுகள்.  தொடர் புனைவு என்றாலும் தென்கொரியா முழுக்கவே சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால்தான் இருக்கிறது என காட்டுகிறார்கள். இது எந்தளவு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை.  எமர்ஜென்சி ஸ்பெஷலிஸ்டான நா யீ ஜே, தனது வாழ்க்கை அழிய காரணமான லீ ஜே ஜூன், வெஸ்டர்ன் சியோல் சிறை மருத்துவர் ஜூன் மின் சிக் ஆகியோரை எப்படி பழிவாங்கி ஓட ஓட விரட்டுகிறார் என்பதே கதை.  தொடரில் நீதி நேர்மை என்பதெல்லாம் நா யீ ஜே, எமர்ஜென்சி மருத்துவராக இருக்கும் வரைதான். மாற்றுத்திறனாளிய...

உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

படம்
  ஜல்சா வித்யாபாலன், ஷெபாலி ஷா அமேஸான் பிரைம் அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம்.  மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது. மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அ...

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்...