இடுகைகள்

ஆவணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையை வெளிப்படுத்த புலனாய்வு செய்தி முறை! - எதிர்கொள்ளும் விளைவுகள்

படம்
  பத்திரிகையாளர் அவர் நாட்டில் உள்ள சட்டங்களைப் பின்பற்றித்தான் செய்தி சேகரிக்க வேண்டும். ஒருவேளை நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை அரசு மறைக்கிறது என்றால் அப்போது அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து செய்தி சேகரிக்கலாம். இந்த ஒரு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு எந்த வழியிலும் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் சென்று செய்தி சேகரிக்கக்கூடாது. அப்படி சேகரித்து வெளியிடுவது மக்களின் நலனுக்காக என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வகையில் பத்திரிகையாளர், வெளியிடும் நாளிதழ், ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் செயல்பாடு என்பது சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த முறையிலும் பத்திரிகையாளர், நிறுவனம்   வழக்குகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. செய்திகளை சேகரிப்பதில் விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்து பிற சமயங்களில் சட்டத்திற்கு உட்பட்டு செய்தி சேகரிப்பதே நல்லது. அரசு அமைப்பு, அல்லது தனியார் அமைப்பு, அதிகாரிகள், தனிநபரின் போனை ஒட்டுக்கேட்பது, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவது ஆகியவற்றைச் செய்து ச

பூச்சிகளின் மாதிரிகளை சேகரித்து ஆவணப்படுத்தியவர்! ஆல்பிரட் வாலஸ்

படம்
  ரெகுலர் வடிவம்  ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913) இங்கிலாந்தின் மான்மவுத்ஷையரில் பிறந்தார். தன் 14 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்டார். பல்வேறு வேலைகளை செய்தவர், 1844ஆம் ஆண்டு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்ற  சூழல் ஆய்வாளரை சந்தித்தார். இவர் மூலம் பூச்சிகளை சேகரிப்பதில் ஆர்வம் உருவானது. 1848-52 காலகட்டத்தில்  பல்வேறு தீவுக்கூட்டங்களுக்கு சென்றார்.  அங்கு ஆய்வில் விலங்குகளின் படிமங்கள் மற்றும் தாவரங்களை சேகரித்தார். இயற்கை அறிவியல் சார்ந்த ஆய்வில், பரிணாம வளர்ச்சி பற்றி தானே சில கொள்கைகளை வகுத்தார். இதைப்பற்றி ஆய்வறிக்கையை எழுதினார். 1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினிடம்  தனது அறிக்கையை அனுப்பிவைத்தார். டார்வின் தனது ஆராய்ச்சி அறிக்கையோடு வாலஸின் அறிக்கையையும் இணைத்து அறிக்கையாக்கி லண்டன் லினியன் சங்கத்தில் வெளியிட்டார்.  மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர், 1,25,000 உயிரின மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றில், 5 ஆயிரம் உயிரினங்களை அன்றைய அறிவியல் உலகம் அடையாளமே கண்டிருக்கவில்லை. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாலஸ் சேகரித்த, 2500 பறவைகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு

ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது.  ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா அப்படி ஒரு சக்தியை குற்றங்களை ஆவ

குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார்.  அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.  தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்? குற்றங்களை செய்யும் மனம் குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சே