பூச்சிகளின் மாதிரிகளை சேகரித்து ஆவணப்படுத்தியவர்! ஆல்பிரட் வாலஸ்
ரெகுலர் வடிவம்
ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913)
இங்கிலாந்தின் மான்மவுத்ஷையரில் பிறந்தார். தன் 14 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்டார். பல்வேறு வேலைகளை செய்தவர், 1844ஆம் ஆண்டு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்ற சூழல் ஆய்வாளரை சந்தித்தார். இவர் மூலம் பூச்சிகளை சேகரிப்பதில் ஆர்வம் உருவானது. 1848-52 காலகட்டத்தில் பல்வேறு தீவுக்கூட்டங்களுக்கு சென்றார்.
அங்கு ஆய்வில் விலங்குகளின் படிமங்கள் மற்றும் தாவரங்களை சேகரித்தார். இயற்கை அறிவியல் சார்ந்த ஆய்வில், பரிணாம வளர்ச்சி பற்றி தானே சில கொள்கைகளை வகுத்தார். இதைப்பற்றி ஆய்வறிக்கையை எழுதினார். 1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினிடம் தனது அறிக்கையை அனுப்பிவைத்தார். டார்வின் தனது ஆராய்ச்சி அறிக்கையோடு வாலஸின் அறிக்கையையும் இணைத்து அறிக்கையாக்கி லண்டன் லினியன் சங்கத்தில் வெளியிட்டார்.
மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர், 1,25,000 உயிரின மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றில், 5 ஆயிரம் உயிரினங்களை அன்றைய அறிவியல் உலகம் அடையாளமே கண்டிருக்கவில்லை. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாலஸ் சேகரித்த, 2500 பறவைகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உயிரி புவியியல் துறையை உருவாக்கியவர்களில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸின் பங்கு முக்கியமானது.
https://artsandculture.google.com/story/alfred-russell-wallace-the-grand-old-man-of-science-natural-history-museum/DwWxE23I4LQXIA?hl=en
-------------------------------------
புதுவடிவம் - நன்றி- திரு. ரமேஷ் வைத்யா
Bio(logy) Data
பெயர்: ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russel Wallace 1823 -1913)
பெற்றோர்: தாமஸ் வெரே வாலஸ், மேரி அன்னே வாலஸ்
பிறப்பு: மான்மௌத்ஷையர் ,இங்கிலாந்து
படிப்பு: 9ஆம் வகுப்பு
ஆர்வம்: உலகில் இருக்கும் அத்தனை வகைப் பூச்சிகளையும் பார்த்துவிடுவது
பயணம்: தென் அமெரிக்கா முதல் தென்கிழக்கு ஆசியா வரை
சாதனை: 1,25,000 உயிரின மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றில் 5 ஆயிரம் உயிரினங்களை அன்று அறிவியல் உலகம் அடையாளமே கண்டிருக்கவில்லை. தற்போது, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாலஸ் சேகரித்த 2,500 பறவைகளின் உடல் மாதிரிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
ஆய்வு: விலங்கினங்கள், தாவரங்களின் மாதிரிகளைச் சேகரித்தார். இயற்கை அறிவியல் சார்ந்த ஆய்வில், பரிணாம வளர்ச்சி பற்றி சுயமான சில கொள்கைகளை வகுத்தார். 1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினிடம் தனது ஆய்வு அறிக்கையை அனுப்பிவைத்தார். டார்வின் தனது பரிணாமவளர்ச்சி ஆய்வு அறிக்கையோடு, வாலஸின் ஆய்வையும் இணைத்து லண்டன் லினியன் சங்கத்தில் வெளியிட்டார்.
பெருமை: உயிரி புவியியல் துறையை (Biogeography) உருவாக்கியவர்களில் முக்கியமானவர்
கருத்துகள்
கருத்துரையிடுக