இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பதுதான் எனது வேலை - ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

 











ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

இயற்கை பேரிடர் வல்லுநர், யுனிசெஃப்

தற்போது தாங்கள் என்ன பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

இயற்கை பேரிடர்களை முன்னமே கணித்து தடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். இயற்கை பேரிடர் ,நடந்த முதல் 72 மணிநேரம் முக்கியமானது. அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.  இதற்கென சில மாதிரிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் மண்டல அளவிலான அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவோம். இப்போது தகவல்களுக்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளோம். 

நீங்கள் ஜியோமேட்டிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

எனக்கு புவியியல் துறையில் ஆர்வம் உண்டு. எனக்கு 14 வயதாகும்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைப் பார்த்தேன். இந்த இயற்கை பேரிடர்தான் இத்துறையில் நான் இன்று பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் அரசு அதிகாரியான எனது தந்தை அங்குள்ள மீனவர்களை அடிக்கடி சந்திப்பார். நானும் அப்படிப்பட்ட நேரத்தில் அப்பாவுடன் கூடவே செல்வேன். 

சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பிறகு அக்கடற்புரத்திற்கு நான் சென்றேன். இயற்கை பேரிடரால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை நேரடியாக பார்த்தேன். புயல்களை எதிர்கொண்ட அம்மக்களுக்கு சுனாமி புதிது.  இவர்களை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து உயிரைக் காப்பாற்றலாம் என தாமதமாகவே அறிந்தேன். ஜியோமேட்டிக்ஸ் படித்து அதிலுள்ள பொருட்களை பயன்படுத்தியபிறகு எனக்கு இத்துறை சார்ந்த தன்னம்பிக்கை வந்தது. 

கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக அடைந்த மேம்பாடுகளை ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

செயற்கைக்கோள் மூலம்  இயற்கை பேரிடர் பற்றிய எச்சரிக்கையை பெறுவதோடு ஏற்படும் சேதங்களையும் அறிய முடிகிறது. தொலைத்தொடர்பு இல்லை என்றாலும் பாதிக்கப்பட்ட  இடங்களை செயற்கைக் கோள் மூலம் அடையாளம் கண்டு காப்பாற்ற முடியும். இதற்கென உள்ள அமைப்பின் பெயர், இன்டர்நேஷனல் சார்ட்டர் ஸ்பேஸ் அண்ட் மேஜர் டிசாஸ்டர்ஸ். இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடங்களைப் பற்றிய தகவல்களை இலவசமாக உலக நாடுகளுக்கு வழங்குகிறது. 

ஜியோமேட்டிக்ஸ்  துறை மக்களை எப்படி குழுவாக காப்பாற்ற உதவுகிறது?

முன்னதாக எச்சரிக்கும் தொழில்நுட்ப அமைப்புகள், இப்போது உருவாகியுள்ளன.  பல்வேறு பேரிடர் மாதிரிகளை முன்வைத்து பாதிக்கப்படும் புயல் பகுதிகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்ய முடிகிறது. குறிப்பிட்ட இடத்தின் தட்பவெப்பநிலை, மக்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். 



Ahead of the storm -

deepa padmanaban

discover may june 2022

 


கருத்துகள்