இடுகைகள்

அரசு விதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு கொள்கைகளை வகுத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும்!

படம்
நாம் நினைத்ததை நிலைமை மோசமாக உள்ளது டேவிட் வாலஸ் வெல்ஸ் , நியூயார்க் மேகசின் கூடுதல் ஆசிரியர் . வெப்பமயமாதல் பற்றி தி அன்ஹேபிட்டபிள் எர்த் என்ற நூலை எழுதியுள்ளார் . ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்கு வந்தவரிடம் பேசினோம் . நீங்கள் உங்கள் நூலின் தொடக்கத்திலேயே இப்போது உள்ளதை விட நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளீர்களே ? நாம் என்ன செய்துள்ளோம் என்று கூட தெரியாதபடி வெப்பமயமாதலுக்கான விஷயங்களை செய்து விட்டோம் . இப்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் கூட புயல்கள் , கடலின் நீர்மட்டம் உயர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் . கொல்கத்தா போன்ற நகரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் . வெப்ப பாதிப்பால் பலரும் சுருண்டு விழுவார்கள் . வெப்பமயமாதலால் , 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூழல் அகதியாக இடம்பெயர்வார்கள் . 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் இறப்பார்கள் . இதுமட்டுமன்றி , ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் கரையும் . இதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை திட்டமிடுவது அவசியம் . இதில் நிலப்பரப்பு ரீதியான அரசியல