இடுகைகள்

மகாராஷ்டிரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

படம்
  தி பைசைக்கிள் புராஜெக்ட் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர்.  அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது.. இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான்.  ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள

மனநல பிரச்னையால் தவிக்கும் இந்தியா!

படம்
pinterest பொதுவாக உடல்நல பிரச்னைகளையே இந்தியர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. ஏதாவது ஒன்றிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் இப்போது மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதுபற்றிய கவனமும் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இறப்பதற்கான காரணம் எதுவாக இறந்தாலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோவது ஆபத்தான அறிகுறி. அங்குள்ள யவட்மால் மாவட்டத்தில் மட்டும் ஜூலை வரை 139 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலைகளைத் தடுக்க பிரேர்னா பிரகல்ப் எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இங்குள்ள பதினான்கு மாவட்டத்தில் ஆஷா பணியாளர்கள் இதற்கான பணியாற்றி வருகின்றனர். முழுமையான உளவியலாளர்கள் இத்திட்டத்திற்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் எப்படி தங்களின் பணிச்சுமையோடு இப்பணியை செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் பாதியளவிலான பணியாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சகிப்புத்தன்மை சிதைந்து அச்சம் கூடியுள்ளது

படம்
Youtube மகேஸ் எல்குஞ்ச்வர், விஜய் டெண்டுல்கருக்கு அடுத்து பெரிதும் மதிக்கப்படும் நாடக ஆளுமை. அண்மையில் மகிந்திரா எக்சலன்ஸ் ஆஃப் தியேட்டர் விருதை, வாழ்நாள் சாதனைக்காக வென்றிருக்கிறார்.  விஜய் டெண்டுல்கர், விஜயா மேத்தா, சத்யதேவ் துபே ஆகியோர் மகாராஷ்டிராவில் நாடக இயக்கத்தை உருவாக்கி இருக்கியிருக்கிறீர்கள். இப்போதுள்ள நாடகங்களை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்.  வெளிப்படையாக சொல்வதென்றால், எனக்கு அதுபற்றி எந்த கருத்துமில்லை. நான் தற்போது நாக்பூரில் வசித்து வருகிறேன். இதனால் நாடக இயக்கங்களோடு பெரியளவு தொடர்புகள் கிடையாது. எனக்கு இருக்கும் தற்போதைய ஆதங்கள், எழுத்தாளர்களும் இயக்குநர்களும் நாடகத்தில் ஆழமாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை எனபதே. விஜய் டெண்டுல்கர் ரங்காயன் எனும் குழுவை உருவாக்கி நாடகங்களை உருவாக்கி வந்தார். பிறரும் அப்படித்தான். விமர்சகர்கள் உங்களை விஜய் டெண்டுல்கருடன் சேர்த்துத்தான் பேசுகின்றனர். ஒருவகையில் நீங்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளீர்கள். இதில் உங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறீர்கள்? எனக்கு ஆச்சரியமே

கிராமங்களுக்கு டாக்டர்கள் தேவை!

படம்
Education Medical Dialogues மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்கவும், முதுநிலைப்படிப்பான எம்டி படித்தவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. இதனை அரசு வழங்குவது, இதில் படிக்கும் மாணவர்கள் ஏழு ஆண்டுகள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில்தான். இந்த இட ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் கட்டாயமாக ஏழு ஆண்டுகள் பழங்குடி மக்களின் கிராமத்தில் மருத்துவ சேவை செய்வது கட்டாயம். கிராமங்களில் ஏற்படும் தொற்றுநோய் கவனிக்காமல் விட்டால், அந்த இனத்தையே அழித்துவிடும் அபாயம் உள்ளது. இதற்காகவே அரசு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ள கிராம ப்புற மருத்துவநிலைமை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் பொருள், அங்கு மருத்துவமனைகள் இல்லை என்பதில்லை. சரியான மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது என்கிறார் மருத்துவத்துறையைச் சேர்ந்த தன்னார்வலரான டாக்டர் அமோல் அன்னடேட்.  400 மருத்துவமனைகள், 76 துணை மாவட்ட மருத்துவமனைகள், 26 நகர மருத்துவமனைகள் இருந்துமே இந்த அவலநிலைமை. இந்நிலைமை ஒடிசாவில் உச்சம் தொட்டு நிற்கிறது. இங்கு மருத்துவர்கள் வி0, வி4 என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத