இடுகைகள்

மதிய உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்

படம்
  உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.  கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.  தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.  நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது.  1920ஆம் ஆண்டு மெட்ர

தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

படம்
  கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி க

மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

படம்
  தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உண

மாணவர்களை மேம்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள்!

படம்
  மாணவர்களை மேம்படுத்தும்  கல்வி சீர்திருத்தங்கள்!  ஆந்திரப் பிரதேச அரசு கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை, மேம்பாடுகளை் செய்து வருகிறது.   ஆந்திர அரசு, மாநிலத்திலுள்ள 62 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 80 லட்சம் மாணவர்களுக்கான (தனியார் பள்ளி உட்பட) கல்வியில் கவனம் செலுத்தி பிரமிக்க வைக்கிறது. பள்ளிக்கான பாடத்திட்டங்களை உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு ஆலோசித்து உருவாக்குவது, பயிற்றுமொழியை ஆங்கிலமாக்குவது, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்துவது என பரபரப்பாக ஆந்திர அரசு செயற்பட்டு வருகிறது.  பயிற்றுமொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது அங்கு, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இம்முயற்சி மாணவர்கள் உலகளவில் தம் அறிவை விரிவுப்படுத்திக்கொள்ள உதவும் என்கிறது ஆந்திர அரசு. ”அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்குவதே அரசின் லட்சியம். புதிய சீர்திருத்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும்” என்கிறார் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சரான அடிமுலப்பு சுரேஷ்.  ஆந்திர அரசு, மாணவர்களுக்கு ம

இந்தியாவில் பாதிக்கும் மேலான பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை உள்ளது! - யுனிசெப் ஊட்டச்சத்துத்துறை தலைவர் அர்ஜன் டி வக்த்

படம்
      அர்ஜன் டி வக்த்   அர்ஜன் டி வக்த யுனிசெப் ஊட்டச்சத்து துறை தலைவர் ஆந்திரம் , தெலுங்கானாவில் யுனிசெப் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க என்ன வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ? நாங்கள் இந்திய அரசின் போஷான் அபியான் என்ற திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம் . தெலங்கானா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பல்வேறு செவிலியர்கள் நர்ஸ்கள் ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம் . இவர்களோடு இணைந்து குழந்தைகளுக்கு உணவு , தாய்ப்பால் அளிப்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம் . யுனிசெப் அமைப்பு , உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஐசிடிஎஸ் அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது . கர்நாடகம் , ஆந்திரம் , தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக முறையை மேம்படுத்தி வருகிறோம் . குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பது எப்படி ? குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்டிமல் நியூட்ரிஷன் என்று கூறும் வகையில் உணவுகளை வழங்கவேண்டும் . அதுதான் அவர்கள் பிழைத்திருக்கச் செய்யும் . இதோடு தாய்ப்பாலை ஊட்டுவது . இது குழந்தைக்கு பிழைத்திர

குழந்தைகள் ஊட்டச்சத்தான முட்டையை பெறுவதை தடுக்கும் ஜெயின் அமைப்புகள்!- முட்டை அரசியல்

படம்
              முட்டையில் அரசியல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் மத்திய பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் இமார்த்தி தேவி, முக்கியமான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஆறுமாத குழந்தைகள் முதல் ஆறுவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேச மாநில குழந்தைகள் கடுமையான ஊட்டச்சது பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உணவு அரசியலும் உண்டு. பாஜக ஆளும் மாநிலங்கள் எதிலும் முட்டை மதிய உணவில் வழங்கப்படுவதில்லை. சுத்த சைவம்தான். இதனை தங்களது கருத்தியல் சார்ந்த அரசியலாகவே பாஜகவினர் செய்கிறார்கள். இம்ராதிதேவி திடீரென மத்திய பிரதேசத்தில் முட்டை வழங்க காரணம் என்ன? அங்கு விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலும் முக்கியமான காரணம். பாஜவில் சேர்ந்துள்ள ஜோதிராதித்யா சிந்தியாவின் விசுவாசி இவர். ஆனால் கமல்நாத் அரசில் அமைச்சராக பதவி பெற்று வேலை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பதவியிலிருந்து பாஜக அரசு மதிய உணவு மற்று்ம அங்கன்வாடி மையங்களில் முட்டைகளை வழங்க ஒப்புக்கொள்ளவிலை. இப்போதும் கமல்நாத் அரசின் உத்தரவை தீவிரமாக எதிர்த்து வருகிறத

ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!

படம்
வலதுபுறம் சுமன்த்ரா ரே இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல. இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன? ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச