மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

 








தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 

அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உணவுத்திட்டம் உதவியுள்ளது என 2006 முதல் 2016 வரையிலான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

மதிய உணவுத்திட்டம் 1995ஆம் ஆண்டு அறிமுகமானது. 450 கலோரி கொண்ட உணவு என்பதுதான் இதில் முக்கியமான அமசம். 1999ஆம் ஆண்டு வாக்கில் 6-10 வயது கொண்ட 6 சதவீத பெண் குழந்தைகள் மட்டுமே இதில் பயன்பெற்றனர். பின்னர், மதிய உணவுத்திட்டம் உச்சநீதிமன்ற ஆணைப்படி விரிவுபடுத்தப்பட்டது. இதனால் 46 சதவீத குழந்தைகள் பயன்பெற்றனர். இந்தியாவில் பெண்கள் பள்ளிப்படிப்பு முடிந்தவுடே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் பள்ளி படிப்பின்போதே அவர்களுக்கு ஊட்டச்சத்து தொடர்பான உதவி தேவை என்கிறார் மதிய உணவு ஆய்வறிக்கை எழுதியவர்களில் ஒருவரான பூர்ணிமா மேனன்.  


பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், அரசு தானியங்களை அல்லது பண உதவிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இது சமைத்த உணவுகளை மாணவர்களுக்கு வழங்குவதோடு ஒப்பிட்டால் பெரியளவு நன்மைகள் தருமா என்று தெரியவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து நிறுத்தப்படும் வாய்ப்பும் அதிகமுள்ளது. இவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, அடுத்துவரும் தலைமுறையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

மூலம் 

தி இந்து ஆங்கிலம்

https://www.thehindu.com/news/national/midday-meals-result-in-healthier-next-generation-study/article35393273.ece?utm_source=morningbrew&utm_medium=email&utm_campaign=Newsletter&pnespid=1_99p.0DBBCN3qELA8NWWdy_9XieHV5u9sSvOrw






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்