மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்
ஜொனாதன் டேனியல் பிரைஸ்
ஃபேஷன் போட்டோகிராபர்
புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின?
சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.
உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?
நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.
உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?
மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை நான் அறிந்துவருகிறேன். நான் உலகிற்கு வெளியே உள்ள மனிதன்தான். ஆனால் புகைப்படங்கள் வழியாகத்தான் இந்த உலகிற்கு வருகிறேன்.
உங்களுக்கு ஐடியாக்கள் எப்படி கிடைக்கின்றன?
பெரும்பாலான ஐடியாக்கள் உள்ளுணர்வின்படி வருவதுதான். இளைஞனாக இருக்கும்போது ஒருவரின் உடை எப்படி அவரை மாற்றிக்காட்டுகிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். இதை ஃபேஷன் துறையில் நுழைந்து நிறைவேற்றிக்கொண்டேன். அடுத்து, 2019ஆம் ஆண்டில் மறைந்த எனது தாத்தாவுக்கு அஞ்சலியாக, அவரை அறிந்தவர்களை தனியாக புகைப்படம் எடுத்து அவரைப் பற்றி பேசித் தெரிந்துகொண்டேன்.
நிலப்பரப்புகளை படம் பிடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்
நான் மனிதர்களை படம்பிடிப்பது பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறேன். பொதுமுடக்க காலத்தில் எனக்கு இயற்கை சார்ந்த விஷயங்களை படம் எடுக்க நினைத்தேன். அதன்படி ஒரே இடத்தில் பார்க்கும் வானத்தை படம் எடுத்தேன். இவை அனைத்து விஷயங்களும் எப்படி நம்மை கடந்து போகிறது என்பதை உணர்த்தும்
ஜிக்யூ
கருத்துகள்
கருத்துரையிடுக