அறிவியல், கணிதம், கணினி சாதனைகளை போராடி சாதித்த பெண்கள்!
எமிலி டு சடலெட்
கணிதவியலாளர், இயற்பியலாளர், எழுத்தாளர்
எமிலி பிரான்சைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்தார். 1706இல் பிறந்தவர், தனது மகளை பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் விவாதிக்கும் இடங்களுக்கு செல்ல அனுமதித்தார் இவருக்கு லத்தீன் கிரேக்கம், ஜெர்மன், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் புகழ்பெற்றார்.
எமிலியின் துணைவராக த த்துவ வியலாளர் வால்டேர் இருந்தார். இருவரும் சேர்ந்து ஒன்றாக நூலை எழுதினர் அறிவியல் ஆய்வகத்தை வீட்டிலேயே உருவாக்கி வைத்திருந்தார். நியூட்டனின் பல்வேறு கோட்பாடுகளை மொழிபெயர்ப்பு செய்தார். வானியல், ஈர்ப்புவிசை இயற்கை ஒளி, நிறம் ஆகியவற்றைப் பற்றிய புது கண்டுபிடிப்புகளை பலரும் படிக்க எமிலியின் மொழிபெயர்ப்பு உதவியது.
வால்டேர், எமிலியைப் பற்றி பெண்களி்ல யாரும் இந்தளவு கற்க முடியாது என பெருமையாக கூறினார்.
பாரிசில் உள்ள அறிவியல் கழகத்தில் நெருப்பின் தன்மை பற்றிய தனது அறிவியல் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அடா லவ்லேஸ்
கணினி கோடிங்கை முதலில் எழுதிய பெண்மணி
அமெரிக்க ராணுவத்தில் உருவாக்கப்பட்ட அடா என்ற கணினி மொழிக்கு பெயர் எப்படி வந்தது என யோசித்திருக்கிறீர்களா? எல்லாம் இவரை கௌரவப்படுத்தத்தான்.
பாப்பேஜ்தான் கணினி முறைக்கு தந்தை என்று அழைக்கப்படுகிறார். அனாலிடிகல் எஞ்சின் என்பதை அவரது வாழ்நாள் முடிவது வரையில் தயாரிக்க முடியவில்லை. அப்படி தயாரித்திருந்தால் அதனை இயங்க வைத்திருக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிறுவயதில் அடா கணிதம் மீது பித்தாக இருந்திருக்கிறார். தனது 17 வயதில் அவர் பிரிட்டிஷ் கணிதவியலாளர் சார்லேஜ் பாப்பேஜை சந்தித்திருக்கிறார். அப்போது பாப்பேஜின் இயந்திரம் சிறப்பாக இயங்கியிருக்க தொடங்கவில்லை. அதனை அடாதான் அல்காரிதம் உருவாக்கி மேம்படுத்தினார். அதில் அட்டைகள் மூலம் தகவல்களை உள்ளிடும் முறை பின்னர் உருவானது.
கணினி மீது காதல் கொண்டிருந்தாலும் சூதாட்டமும் அவரது மூளையில் ஒருபக்கம் இருந்தது. இதற்காக பந்தயத்தில் குதிரை வெல்வதற்கான அல்காரித மாடல் ஒன்றை உருவாக்க மெனக்கெட்டார். ஆனால் இம்முயற்சி தோல்வியில் முடிய, தனது குடும்ப நகைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேரி ஆன்னிங்
அகழாய்வு வல்லுநர்
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நிலவியலாளர் மேரி ஆன்னிங் தனது இயல்பான அகழாய்வு திறமையால் பல்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்தார்.
1799ஆம் ஆண்டு பிறந்த ஆன்னிங், இங்கிலாந்திலுள்ள கடற்புற பகுதியான டோர்செட்டில் வளர்ந்தார். அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிப்பிகளை விற்று வந்தனர். அப்படி இருக்கும்போது ஒருநாள் கடல் வாழ் உயிரினம் ஒன்றின் பெரிய ஓட்டைக் கண்டுபிடித்தனர் அதனை ஃபிஷ் லிசார்ட் என்று கூறலாம்.
மேரி, குழந்தையாக இருக்கும்போது மின்னலால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்த அற்புத அனுபவம் கொண்டவர். கடற்புறத்தில் பல உயிரினங்கள் இருக்கிறதா இல்லையான என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஏராளமான விலங்குகளின் படிமங்களைக் கண்டுபிடித்தார். ஆன்னியின் கண்டுபிடிப்புகள் பிறரையும் இதுபற்றிய செய்திகளை அறியத் தூண்டியது. இதன் விளைவாக அவர் ஆய்வு செய்த கடற்கரை 185 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று அறியப்பட்டது. காற்று, மழை, கடல் அலை என பலவும் சேர்ந்து ஆன்னிக்கு உதவி செய்ய பல்வேறு படிமங்களை கடற்கரையில் கண்டுபிடித்து சாதிததார்.
முறையான படிப்பு இல்லாமல் படிமங்களை தேடி அலைந்து திரிந்தார் ஆன்னி. இதனால் இவருக்கு பின்னர் வந்தவர்கள் , ஆன்னியின் பல்வேறு கண்டுபிடிப்புகளை வைத்து கோட்பாடுகளை உருவாக்கினர். இதனால் உலகில் உயிர்கள் எப்படி உருவாகின என்பதை அறிய முடிந்தது.
ஆன்னி கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் உருவாக்கினார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இவர் கண்டுபிடித்த அனைத்து விஷயங்களும் இவரது நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தன.
சோபியா கோவலேஸ்காயா
அறிவியல் மற்றும் கணித வல்லுநர்
ரஷ்யாவின் அறிவியல் கழகத்தில் முதல் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோபியா. இவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் 1850ஆம் ஆண்டு பிறந்தார். அன்று பெண்களுக்கு கல்வி கற்பிக்க பெரிதாக ஆர்வம் காண்பிக்கப்படவில்லை. சோபியாவுக்கு கணிதம் என்றால் பைத்தியம். அவரது அப்பா இதை அறிந்துகொண்டு கணக்கை விட்டுவிட்டு படிப்பை கவனி என உத்தரவிட்டார். ஆனால் சோபியா ரக்சியமாக இயற்கணித நூலை வாங்கி வைத்துக்கொண்டு இரவில் படித்து தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.
ஸ்டாக்ஹோம் பல்கலையில் அட்டகாச பேராசிரியராக பணிக்கு அமர்ந்த முதல் பெண் சோபியாதான். 1888இல் முக்கியமான கணித பரிசை பிரான்ஸ் அறிவியல் அகாடமியில் வென்றார். இவரது கண்டுபிடிப்புகளால் ஊக்கம்பெற்றவர்கள் பரிசு தொகையைக் கூட 3000 பிராங்குகளிலிருந்து 5000 ஆயிரமாக உயர்த்தி வழங்கினர்.
ரஷ்யாவில் பெண்களை கல்வி கற்க பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கவில்லை. ஆனால் சோபியாதான் பிடிவாதக்காரி ஆயிற்றே.. அடம் பிடித்து சிறப்பு அனுமதி பெற்று ஜெர்மனி சென்று படித்தார். ஐரோப்பாவில் கணித பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் அம்மணிதான்.
பொருட்கள் சுற்றுவது பற்றிய இவரது கணித கண்டுபிடிப்பு முக்கியமானது. இவரைப் பின்பற்றி நிறைய பெண்கள் கணித துறைக்கு வர சோபியா முக்கியமான ரோல்மாடல்தான்.
லிஸ் மெய்ட்னர்
இயற்பியலாளர் அணுசக்தியை கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன பெண்மணி.
1878ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் யூதக்குடும்பத்தில் மெய்ட்னர் பிறந்தார். அன்று பெண்களுக்கு குறிப்பிட்ட கல்வி வரம்பு இருந்தது. ஆனால் மெய்ட்னர் அறிவியலில் ஆர்வம் காட்டியதால் ஆராய்ச்சியாளராக வேலை கிடைத்தது. இயற்பியலாளர் மேக்ஸ் பிளான்க் என்பவரின் கீழ் மெய்ட்னர் பணியாற்றினார். அப்போது பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கப்படாத வேதனையான நிலை இருந்தது.
ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மெய்ட்னர் மற்றும் அவரது நண்பரான ஓட்டோ ஜான் ஆகியோர் யுரேனியம் பற்றி ஆராய்ச்சி செய்தனர். இதில் யுரேனியம் அணுக்களை இரண்டாக பிரிக்க முடியும் என்பதுதான் இவரது தியரி. இந்த நிகழ்வில் ஏராளமான ஆற்றல் வெளிப்படும். இதனைத்தான் நியூக்ளியர் ஃபிஷன் என்று அழைக்கின்றனர்.
1938ஆம் ஆண்டு மெய்ட்னர் யூத படுகொலை முயற்சிகளிலிருந்து தப்ப அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். இதனால் இவர் செய்த ஆராய்ச்சிகளை இவருடன் இருந்தவர்கள் உரிமை கொண்டாடினர். அணுக்கரு பிளவுக்காக நோபல் பரிசு கூட வென்றனர். இருந்தாலும் ஆறுதலாக மெய்ட்னரின் ஆய்வுக்காக தனிமம் 109 யை மெய்ட்னரியம் என்று பெயர் சூட்டினர்.
100 woman who made history
கருத்துகள்
கருத்துரையிடுக