சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்
சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது?
உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது. அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது.
சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும். இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும். இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம். சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன. இவற்றில் உள்ள ஃபில்டர்தான், குளோமெருலஸ். இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது. இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு, கழிவுகளை வடிகட்டுகிறது. இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது. சோடியம், பொட்டாசியம், புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவுப்பொருட்களை மட்டும் உறிஞ்சிக்கொண்டு பிற பொருட்கள் எல்லாம் ரத்த த்தில் சேர்க்கப்படுகின்றன. கழிவு பொருட்கள் உள்ள நீர் சிறுநீராக மாறுகிறது.
இதயத்திலிருந்து சிறுநீரகம் 20 சதவீத ரத்தத்தை பெற்று தனது செயல்பாடுகளை செய்கிறது. இருபத்து நான்கு மணிநேரத்தில் 200 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. இதில் இரண்டு லிட்டர் அளவில் கழிவுப்பொருட்கள் சேர்ந்து சிறுநீராக வெளியேறுகிறது.
நீங்கள் காலையில் டீ அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உடனே சிறுநீர் கழிக்கத்தோன்றும். இதற்கு காரணம், தூங்கியபிறகு நெடு நேரம் கழித்து உடலுக்குள் புதிதாக நீர்மம் வருவதை சிறுநீரகம் உணர்வதுதான். உடலில் உள்ள ரத்தத்தில்
சோடியம் அளவு சரியாக இருப்பதை சிறுநீரகம் கவனித்து சரிபார்த்து தக்கவைத்துக்கொள்கிறது. ரத்த அழுத்தத்தை மகுலா டென்சா செல்களும், சோடியத்தின் அளவை ஜக்ஸ்டாகுளோமெருலர் செல்கள் சரிபார்த்து கண்காணிக்கின்னன. ஜக்ஸ்டாகுளோமெருலர் செல்கள்தான் ரெனின் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆஞ்சியோடென்சின் என்று உருமாறி ரத்த நாளங்களில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சோடியம் அளவு குறைந்தால் அதனை சரி செய்வதுதான் இதுதான். ரத்த அளவை அதிகரிப்பதோடு, ஆக்சிஜன், சத்துகளையும் கூடுதலாக அனுப்ப தகவல் அனுப்புகிறது.
ரத்த அழுத்தம் என்பது பொதுவாக 120/80 எம்எம்ஹெச்ஜி என்ற அளவில் இருக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, உணர்ச்சிகரமான சூழல், மன அழுத்தம் ஆகிய நிலைகளின் போது ரத்த அழுத்தம் ஏறி இறங்கும். நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் சிறுநீரகம் அதனை குறிப்பிட்ட அளவில் பராமரித்து வரும். ரத்த அழுத்தம் கூடினால் அதனை குறைக்க நாம் அறிந்த செயலை செய்யும். காபி, டீ ்குடித்தவுடன் உடனே சிறுநீர் கழிக்க தோன்றுவது உடலின் ரத்த அழுத்தத்தை பராமரிக்கத்தான்.
பெண்களுக்கு ஆண்களை விட சிறுநீரகம் சிறியது. இதில் உள்ள நெப்ரான்களின் அளவும் குறைவுதான். பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போத அவர்களின் உடலில் ரத்த அழுத்தம் பெரிதும் மாறுபடும். பெண்களுக்கு நெப்ரான்கள் குறைவாக உள்ள நிலையை குளோமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் என்று குறிப்பிடுகின்றனர். பெண்கள் 35 வயதைக் கடந்துவிட்டால் அவர்களுக்கு சிறுநீரகத்தின் பணி மெல்ல குறையத்தொடங்கும். அதாவது அதன் செயல்திறன் மெல்ல குறையும். இந்த விகிதம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க புரோஜெஸ்டிரான் சுரப்பு பயன்படுகிறது.,
ரெனின், ஆஞ்சியோடென்ஷன், ஆல்டோஸ்ட்ரோன் ஆகியவற்றின் கூட்டாகவே சிறுநீரகம் செயல்படுகிறது. நாம் சாப்பிடும்போது மட்டுமல்ல, சாதாரணமாக இருக்கும்போதும் சிறுநீரகம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது உடற்பயிற்சி செய்யும்போது உடல் உறுப்புகளில் உள்ள ரத்தம் குறிப்பிட்ட தசைபகுதிகளுக்கு செல்லும் இதனால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனை சரி செய்ய தேவையான அளவில் நீரை குடிக்கவேண்டும். கால்சியம், பொட்டாசியம் ஆகியவற்றை சரியான நிலையில் வைத்துக்கொண்டு சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் சிறுநீரகம் முக்கியப் பங்காற்றுகிறது.
சிறுநீரகம், எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இதுவே ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. சிவப்பு அணுக்களை முதிர்ச்சி பெற வைக்க உதவுகிறது., சிறுநீரகம் சேதமடைந்தால், இந்த ஹார்மோன் சுரக்காது. இதன் விளைவாக, உடலில் ஏற்படும் குறைபாடுதான் அனீமியா. ரத்தசோகை என்று இதனை எளிமையாக புரிந்துகொள்ளலாம்.
உடலில் தேவையான சிவப்பு அணுக்கள் இல்லையென்றால் எளிதாக சோர்வடைவதோடு எந்த வேலைகளையும் செய்ய முடியாது. ரத்த செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காத நிலை இது. விட்டமின் டி சத்தைக் கூட சிறுநீரகம்தான் பயன்படுத்தும்படியாக மாற்றி தருகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது, உடலில் கழிவுகள் தேங்க தொடங்கும். அதிக ரத்த அழுத்தம், மன அழுத்தம், கழிவுநீர்நீர் தேங்குவது ஆகியவை சிறுநீரகம் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம்.
சிறுநீரகம் செய்லிழந்துவிட்டால் ஒருவர் வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யவேண்டியிருக்கும். பெரும்பாலனோருக்கு பிறக்கும்போது ஒரு சிறுநீரகம் மட்டுமே இருக்கும் இதனால் இவர்கள் அதனை கவனமாக பாதுகாக்க வேண்டும். பிறருக்கு இரண்டு இருக்கும். ஆனால் ஒன்று மட்டுமே உள்ளவருக்கு பேக் அப் கிடையாது என்பதால் கவனமாக இருக்கவேண்டும்.
நல்ல உணவு, உடற்பயிற்சி, நீர் நிறைய குடிப்பது ஆகியவை எப்போதும் பின்பற்றினால் மட்டுமே சிறுநீரகத்தை காப்பாற்ற முடியும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் என்பது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
உலகில் பதினைந்து சதவீத மக்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை உண்டு. இதற்கு உணவுமுறை, மரபணு குறைபாடு ஆகிய காரணங்கள் உண்டு. கால்சியத்தால் உருவாகும் கற்கள் என்பது பொதுவானது. இதில் முக்கியப் பிரச்னை கற்கள் சிறியதோ பெரியதோ வலி தாங்க முடியாது. நிலை அப்படியே நீடித்தால் வாந்தி வரத் தொடங்கும். உணவு சாப்பிடுவது கடினமானதாக மாறும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டுவிட்டு குறைவான நீரை குடிப்பவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் உருவாகும். அடுத்து மலத்தில் அமினோ அமிலங்கள் அதிகம் வெளியேறினால் ஏற்படும் கற்கள் என்பது மரபணுக் குறைபாடாகும். இதனை சிஸ்டைன் கற்கள் என்று கூறுகிறார்கள்.
கற்கள் இருந்தால் சிறுநீர் கழிப்பது கொடூரமான அனுபவமாக மாறும். கற்கள் சிறுநீர் பாதையை அடைத்துவிட்டால் அதில் ரத்தம் கலந்து வரும். வலியும் உயிர்போகும். கற்களின் அளவைப் பொறுத்து இதற்கான மருத்துவம் மாறுபடும். சிறிய கற்களாக இருந்தால் ஸ்டீராய்டு இல்லாத மருந்துகள் பயன்படும். கற்கள் பெரிதாக இருந்தால், அதனை உடைத்து சிறு கற்களாக்கி வெளி வரச்செய்கிறார்கள். இதனை லித்தோட்ராப்ஸ்கி என்று கூறுகின்றனர். அறுவைசிகிச்சையும் உதவும். சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்கள் பாஸ்பாரிக் அமிலம் உள்ள குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
செலிவியா ஆஸன்
சயின்ஸ் போகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக