குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டரீதியான பிரச்னைகள்!

 

 

 

 Love, Loving, Me, Child, Hope, Prayer, Pleading

 

சட்டவிரோத தத்தெடுப்பும், பிரச்னைகளும்


பொதுவாக இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கியமானது. அதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை தருகிறது. மகன், மகள் பிறக்கும்போது அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுகிறது. மரணத்தில் கூட ஒருவருக்கான சடங்குகளை அவரின் ரத்த வழிகளைச் சேர்ந்தவர்தான் செய்யவேண்டும் என்பதுதான் இந்து மத நம்பிக்கை.


திருமணமான பெண்கள், கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மெல்ல சித்திரவதைகள் தொடங்கும். மலடி என்று அழைப்பதோடு, அந்த பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென கூறுவதும் தொடங்கும். இதற்கும் மேலாக இப்படி குழந்தை பெறாத பெண்களை சமூக புறக்கணிப்பு செய்து விழாக்களில் தவிர்ப்பதும் இயல்பாக நடக்கிறது. இதனை பெரும்பாலும் பெண்களே வன்மத்துடன் செய்கிறார்கள்.


சட்டரீதியான தத்தெடுப்பு என்பதை பெற்றோர் பலரும் ஏற்காமல் அவசரப்படுகிறார்கள். இதனால் தரகர்கள் உள்ளே புகுந்து சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க உதவுகின்றனர். முதலில் இதற்கென தனியாக தொகையை வாங்குபவர்கள் பின்னர், பெற்றோரின் சென்டிமெண்ட்டை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொகையை பிடுங்குகின்றனர். பெற்றோரும் குழந்தையை விட்டுக்கொடுக்க கூடாது என பணத்தை கொடுத்து தரகர்களை ஊக்குவிக்கின்றனர். இதில் பெற்றோர் வளர்ந்த சிறுவர்களை த த்தெடுக்கவிரும்புவதில்லை. அவர்கள் குழந்தைகளை மட்டுமே அதிகம் பெற்று வளர்க்க நினைக்கின்றனர். இதனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களிடம் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் என்று கூறவேண்டிய சங்கடம் இல்லை என்று நினைக்கின்றனர். இதனை தரகர்கள் தங்களுடைய ஆதாயங்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.


சட்டரீதியாக குழந்தைகளை பெற்றோர் வளர்க்க ஒன்றரை ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தேவை. இந்த ஆண்டுகள் தோராயமானது. இந்த வகையில் குழந்தைகளை வளர்க்க பதிவு செய்த பெற்றோர்களுக்கு குழந்தைகள் வழங்கப்படுகின்றரர். ஆனால் இவ்வளவு காலம் காத்திருக்க முடியாதவர்கள், தரகர்களை நாடுகிறார்கள். சட்டரீதியான சிக்கல்களில் மாட்டிக்கொண்டு குழந்தைகளையும் பறிகொடுக்கிறார்கள்.


தனிப்பட்ட மனிதர் தனக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வது அவரது உரிமை. ஒரு குடும்பத்துடன் வாழ்வதற்கான உரிமை குழந்தைக்கு உண்டு. காப்பகம், அமைப்பு, நிறுவனம் ஆகிய இடங்களில் குழந்தைகள் வாழ்வதை விட குடும்பத்துடன் வாழ்வதே சிறப்பானது. தத்தெடுப்பதில் சிறப்புக்குழந்தைகளையும் மத்திய த த்தெடுக்கும் ஆணையம் பெற்றோர்களுக்கு காட்டுகிறது. ஆனால் அவர்களை தேர்ந்தெடுக்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. ஒருமுறை தத்தெடுக்க பெற்றோர் பதிவு செய்தவுடன் அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு அமைப்பு, குறிப்பிட்ட பெற்றோரின் இடம் சார்ந்து உள்ள காப்பகத்தை ஆய்வு செய்கிறது. பிறகு பல்வேறு ஆவணங்களை சரிபார்ப்பது நடக்கிறது. பிறகு பெற்றோர் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. த த்தெடுப்பு கமிட்டி, சமூகநலத்துறை அதிகாரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவினர், காப்பகத்தின் தலைவர் ஆகியோர் எடுக்கும் முடிவில்தான் தத்தெடுப்பு இறுதி முடிவை எட்டுகிறது.


ஷோபனா ராதாகிருஷ்ணன்




கருத்துகள்