பத்தாவது பெயிலா? கொடைக்கானலில் எனது வீட்டில் வந்து தங்குங்க!- புதுமை மனிதர் சுதீஷ்

 



செய்திஜாம்

ஆஹா!

சமையல் சாதனை!





ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த இவர் சமையல் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனின் வெற்றியாளராகி 1.86 கோடி ரூபாயை வென்றிருக்கிறார். ”உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனிதர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை எப்போதும் உங்கள் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளும்படியுங்கள். இதை வாசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார் ஜஸ்டின். 


https://www.indiatimes.com/entertainment/celebs/indian-origin-justin-narayan-wins-masterchef-australia-season-13-takes-home-rs-186-crore-544905.html


காட்சிப்படம் !




காட்டுத்தீயை அணைக்க முயலும் விமானம்!

இடம் அமெரிக்கா, வாஷிங்டன்


அபாரம்!

பசியின் மொழி!






ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் உஸ்மான் அசார் மெக்சூசி. இவர் பசிக்கு மதமில்லை என்ற திட்டத்தை தொடங்கி ஐந்து நகரங்களில் உள்ள 1,500 மக்களுக்கு தினசரி உணவிட்டு வருகிறார். இதனை பத்து ஆண்டுகளாக செய்துவருபவருக்கு ஐ.நா அமைப்பு, காமன்வெல்த் பாய்ன்ட் ஆப் லைட் விருதை அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு ஹைதராபாத்திலுள்ள தபீர்புரா மேம்பாலத்தின் அருகே பசியோடு இருந்த லஷ்மி என்ற பெண்ணுக்கு உணவு வழங்கத் தொடங்கி இப்போது திட்டம் பெரியளவுக்கு விரிவடைந்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திக்கொண்டு தனது திட்டத்தை குழுவினருடன் செயல்படுத்தி வருகிறார் சையத்.

https://www.indiatimes.com/news/india/hyderabad-man-serving-free-food-to-poor-for-10-years-gets-uk-award-544312.html

அச்சச்சோ!

வெள்ள பாதிப்பு!

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்த மழை காரணமாக எழுபது பேர்கள் பலியாகியுள்ளனர் என அரசு கூறியுள்ளது. ரைன்லாந்த், பாலட்டினேட், ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்களில்  மழை வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது. அமெரிக்கா சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஆஞ்சலா மெர்கல், அரசுபடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும். சவாலான சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதீர்கள் என்று கூறினார். பருவச்சூழல் மாறுபாடுதான் இப்படி அதிக மழைக்கும் காரணம் என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர். 

https://www.bbc.com/news/world-europe-57846200

இது புதுசு!

மன அழுத்தம் போக்கலாம்!




கொடைக்கானலைச் சேர்ந்தவர் , கே.சுதீஷ். இவர் பத்தாவது தேர்ச்சி பெறாத மாணவர்களை  தனது வீட்டில் அவர்களின் பெற்றோரோடு இருநாட்கள் தங்க வைப்பதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களின் துயரம் நீங்கும் என சுதீஷ் நம்புகிறார். கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் 2006 ஆம் ஆண்டு முதல் கொடைக்கானலில் குடும்பத்துடன்  வாழ்கிறார். ”பத்தாவது தேர்வு முடிவுகள் வெளிவந்ததிலிருந்து வெற்றிபெற்றவர்களைப் பற்றியே அனைவரும் பேசுகிறோம். தேர்ச்சி பெறாதவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்களை மன அழுத்தத்திலிருந்து  வெளிக்கொண்டுவரவே இந்த முயற்சி” என்றார் சுதீஷ் 

https://www.newindianexpress.com/good-news/2021/jul/16/failed-in-sslc-exams-entrepreneur-offers-free-stay-in-kodaikanal-for-students-whocouldnt-get-through-2330767.html

பாராட்டுவோம்!

Govt launches campaign to increase jabs for tribal population



The campaign, launched by Tribal Affairs Minister Arjun Munda, will seek to dispel myths surrounding inoculation that are said to be prevalent among tribals in different parts of the country.The Ministry of Tribal Affairs Thursday rolled out a campaign to ramp up vaccination among tribal populations.The campaign, launched by Tribal Affairs Minister Arjun Munda, will seek to dispel myths surrounding inoculation that are said to be prevalent among tribals in different parts of the country.The Ministry will rope in faith healers such as Ojhas, Barwas and Guniyas to spread the message apart from holding gram sabhas and evening chaupals, said officials.


கருத்துகள்