இடுகைகள்

ஃபிட்னஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சி சார்ந்த அக்கறை கூடியிருக்கிறது - ஜோ ரூட், கிரிக்கெட் வீரர்

படம்
  ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? நான் ஜிம்மில் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. வேகம், ஆற்றல் என இரண்டு விஷயங்களுக்காக அங்கு நாற்பது நிமிடங்களை செலவழிப்பேன். அவ்வளவுதான். அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவழிப்பது எனக்கு பிடிக்காது. இளம் வயதில் முதுகில் சில பிரச்னைகள் இருந்ததால், எடைகளை தூக்குவதில் சில தடுமாற்றங்கள் இருந்தன. குறைவான எடைகளை தூக்கி மெதுவாகவே எனது உடலை மெல்ல மேம்படுத்த தொடங்கினேன். நான் கடைபிடித்த நுட்பங்கள் போதுமான நம்பிக்கை தந்தது என்று கூற முடியாது. போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை செய்தீர்களா? முதலில் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் நான் அக்கறைப்ப்படவில்லை. கிரிக்கெட் என்பது திறன் சார்ந்த விளையாட்டு. அங்கு அதிக ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்கவேண்டும். அவ்வளவுதான். இப்படித்தான் தொடர்களில் அதிக ரன்களை எடுத்தேன். ஆனால் இடையில் திடீரென ரன்களை அடிக்க முடியாமல் போய்விடும். பிறகுதான் பயிற்சியோடு ஊட்டச்சத்துகள் பற்றியும் அக்கறை செலுத்த தொடங்கினேன். அந்த வகையில் எங்கள் அணியில் உள்ள ஊட்டச்சத