இடுகைகள்

ராக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

படம்
  இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன. கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள்