இடுகைகள்

பழங்குடிமக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

படம்
      பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்           யாத்ரீகனின் பாதை வினோத் பாலுச்சாமி ப. 150 விலை ரூ. 500 மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை. அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம்.  தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்) ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது. சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக்கச்செல்வது, அச்சூழ்நிலையில் எளிதாக மனிதர்கள் பிற

நான் மோடியை நம்புகிறேன்! - சுப்ரான்சு சௌத்ரி

படம்
சுப்ரான்சு சௌத்ரி முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர். மத்திய இந்தியாவில் மாவோயிச தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாடுபட்டு, கூகுள் டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருதைப் பெற்றுள்ளார். அண்மையில் வாட்ஸ்அப் கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்களில் இவரும் உள்ளதாக செய்திகள் அடிபட்டன. இந்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை அழித்துவிடுவார் என நம்புகிறீர்களா? ஆமாம். ஏன் மோடியால் முடியாது? சத்தீஸ்கர் மாநில முதல்வர் கூட எங்கள் ஆப்பின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. ஆனால் இவர் கவனித்தார். ஊடகங்களில் புல்டூ பற்றிக் கேள்விப்பட்டு பிற மாநிலங்களின் கிராம ப் புறங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் செயல்முறைகளுக்கு இதனை பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி எனக்கு பெரும் ஊக்கம் தந்தவர் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. மாவோயிச தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் எப்படி செயல்படுகிறீர்கள்? நான் சத்தீஸ்கரில் பிறந்து  வளர்ந்தவன். அங்குள்ள நிலம், காடு மீதான உரிமைகளை சுயமாக பெற்றிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் அதனை இழந்துவிட்டதாக மாயை ஏற்படுத்தி  வன்முறை வழி